Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
40 : 35

قُلْ اَرَءَیْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ۚ— اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰی بَیِّنَتٍ مِّنْهُ ۚ— بَلْ اِنْ یَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ۟

35.40. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் உங்களின் இணைதெய்வங்களைக் குறித்து எனக்குக் கூறுங்கள். அவை பூமியில் எதைப் படைத்தன? அதன் மலைகளையோ, ஆறுகளையோ, உயிரினங்களையோ அவை படைத்தனவா? அல்லது வானங்களைப் படைத்ததில் அவற்றிற்கு பங்கு இருக்கின்றதா? அல்லது நாம் உங்களுக்கு ஒரு வேதம் வழங்கி அதில் உங்களின் இணைதெய்வங்களை வணங்குவதற்கு அதில் தகுந்த ஆதாரத்தை வழங்கியுள்ளோமா? முடிவாக இவற்றில் எதுவும் இல்லை. மாறாக இறைவனை நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றத்தையே வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள். info
التفاسير: |
Benefits of the Verses on this page:
• الكفر سبب لمقت الله، وطريق للخسارة والشقاء.
1. நிராகரிப்பு இறைவனின் வெறுப்புக்கான காரணியாக அமைகிறது. இழப்பு, துர்பாக்கியத்துக்கான வழியை ஏற்படுத்துகிறது. info

• المشركون لا دليل لهم على شركهم من عقل ولا نقل.
2. இணைவைப்பாளர்கள் செய்யும் இணைவைப்பிற்கு புத்தி, குர்ஆன், சுன்னா சார்ந்த எவ்வித ஆதாரமும் இல்லை. info

• تدمير الظالم في تدبيره عاجلًا أو آجلًا.
3. அநியாயக்காரனின் சூழ்ச்சி விரைவாகவோ, தாமதமாகவோ அவனுடைய அழிவுக்கு காரணமாக இருக்கின்றது. info