Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: An-Nisā’   Ayah:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ ؕ— وَمَنْ یَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِیْرًا ۟ؕ
4.52. இது போன்ற கெட்ட கொள்கையுடையவர்களையே அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கியுள்ளான். யாரை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிடுவானோ அவருக்கு உதவிசெய்யக்கூடிய எந்தவொரு உதவியாளரையும் பெற்றுக்கொள்ள முடியாது.
Arabic explanations of the Qur’an:
اَمْ لَهُمْ نَصِیْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا یُؤْتُوْنَ النَّاسَ نَقِیْرًا ۟ۙ
4.53. அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து எதையும் அவர்கள் மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். அது பேரீச்சங்கொட்டையின் மேற்புறம் இருக்கும் ஒரு புள்ளியின் அளவாக இருந்தாலும் சரியே.
Arabic explanations of the Qur’an:
اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ— فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟
4.54. மாறாக அவர்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் அல்லாஹ் வழங்கிய தூதுத்துவம், ஈமான், ஆட்சியதிகாரம் ஆகியவற்றின்மீது பொறாமைகொள்கிறார்கள். அவர்கள் ஏன் பொறாமை கொள்கிறார்கள்? நாம் முன்னரே இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் வேதம் அல்லாத வேறு செய்திகளையும் வழங்கியுள்ளோம்! நாம் அவர்களுக்கு மக்களின்மீது விசாலமான ஆட்சியையும் வழங்கியுள்ளோம்!
Arabic explanations of the Qur’an:
فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ— وَكَفٰی بِجَهَنَّمَ سَعِیْرًا ۟
4.55. இப்ராஹீமின் மீதும் அவருடைய வழித்தோன்றல்களில் வந்த தூதர்களின் மீதும் அல்லாஹ் இறக்கியருளியவைகளை நம்பிக்கைகொள்பவர்களும் வேதக்காரர்களில் இருக்கிறார்கள். அதனை நம்பிக்கைகொள்ளாது புறக்கணிப்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கைகொள்வதிலிருந்தும் மக்களைத் தடுத்துவிடுகிறார்கள். இதுதான் முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்டவை குறித்தும் அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அவர்களில் நிராகரிப்பவர்களுக்கு நரகமே தக்க தண்டனையாகும்.
Arabic explanations of the Qur’an:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا سَوْفَ نُصْلِیْهِمْ نَارًا ؕ— كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَیْرَهَا لِیَذُوْقُوا الْعَذَابَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَزِیْزًا حَكِیْمًا ۟
4.56. நம்முடைய வசனங்களை நிராகரிப்பவர்களை மறுமைநாளில் நாம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் நரகத்தில் நுழைவித்துவிடுவோம். அது அவர்களின் தோல்களை எரித்துவிடும்போதெல்லாம் அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக நாம் வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. அவன் திட்டமிடுவதிலும் தீர்ப்பு செய்பவற்றிலும், ஞானம்மிக்கவன்.
Arabic explanations of the Qur’an:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— لَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ؗ— وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِیْلًا ۟
4.57. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் பின்பற்றி நற்செயல்கள் புரிந்தவர்களை மறுமைநாளில் நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்த சுவனங்களில் அவர்களுக்கு எல்லாவித அசுத்தங்களிலிருந்தும் தூய்மையான மனைவியரும் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற அடர்த்தியான நீண்ட நிழல்களில் நாம் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.
Arabic explanations of the Qur’an:
اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰۤی اَهْلِهَا ۙ— وَاِذَا حَكَمْتُمْ بَیْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ— اِنَّ اللّٰهَ نِعِمَّا یَعِظُكُمْ بِهٖ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ سَمِیْعًا بَصِیْرًا ۟
4.58. நம்பிக்கையாளர்களே! உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். நீங்கள் மக்களிடையே அவர்களின் விவகாரங்களில் தீர்ப்பு வழங்கினால் அநீதி இழைக்காது மார்க்கம் தெளிவுபடுத்திய முறையில் நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஞாபகமூட்டுவதும் அனைத்து நிலமைகளிலும் உங்களுக்கு வழிகாட்டுவதும் சிறந்தவையே. அவன் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை பார்க்கக்கூடியவன்.
Arabic explanations of the Qur’an:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ— فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠
4.59. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் - அவர்கள் பாவமான விஷயங்களை ஏவாதவரை - கட்டுப்படுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும் அவனுடைய தூதரின் வழிமுறையின் பக்கமும் திரும்புங்கள். நீங்கள் கருத்து வேறுபாட்டில் தொடர்ந்திருப்பது, சொந்தக் கருத்தைக் கூறுவது ஆகியவற்றை விட குர்ஆனின் பக்கமும் சுன்னாவின் பக்கமும் திரும்புவதே சிறந்ததாகும். அதுவே உங்களுக்கு சிறந்த முடிவையும் தரக்கூடியதாகும்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• من أعظم أسباب كفر أهل الكتاب حسدهم المؤمنين على ما أنعم الله به عليهم من النبوة والتمكين في الأرض.
1. நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அருளாக வழங்கியிருந்த தூதுத்துவம், ஆட்சியதிகாரம் என்பவற்றின் மீது கொண்ட பொறாமையே வேதக்காரர்கள் நிராகரித்தற்கான முக்கியமான காரணியாகும்.

• الأمر بمكارم الأخلاق من المحافظة على الأمانات، والحكم بالعدل.
2. அமானிதங்களைப் பாதுகாப்பது, நீதமான தீர்ப்பு ஆகிய நற்குணங்களைக் கடைபிடிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

• وجوب طاعة ولاة الأمر ما لم يأمروا بمعصية، والرجوع عند التنازع إلى حكم الله ورسوله صلى الله عليه وسلم تحقيقًا لمعنى الإيمان.
3. பாவம் செய்வதற்கு கட்டளையிடாதவரை ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுவதும் கடமையே. இறைநம்பிக்கையை நிரூபிப்பதற்காக கருத்து வேறுபாட்டின் போது அல்லாஹ், ரஸூலின் தீர்ப்பின் பக்கம் திரும்புவதும் கட்டாயக்கடமையாகும்.

 
Translation of the meanings Surah: An-Nisā’
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close