Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Translations’ Index


Translation of the meanings Ayah: (72) Surah: An-Nisā’
وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّیُبَطِّئَنَّ ۚ— فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَیَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِیْدًا ۟
4.72. முஸ்லிம்களே! உங்களில் தமது கோழைத்தனத்தால் எதிரிகளுடன் போரிடச் செல்லாமல் பின்தங்கக்கூடியவர்களும் ஏனையோரை பின்வாங்கச் செய்வோரும் இருக்கின்றார்கள். அவர்கள் நயவஞ்சகர்களும் பலவீனமான ஈமானுடையவர்களும் ஆவர். உங்களுக்கு உயிரிழப்போ தோல்வியோ ஏற்பட்டால், அவர்களில் ஒருவர் தான் தப்பியதை நினைத்து மகிழ்வடைந்து, “அல்லாஹ் என் மீது அருள்புரிந்ததனால் அவர்களுடன் சேர்ந்து போருக்கு நான் புறப்படவில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஏற்பட்டது எனக்கும் ஏற்பட்டிருக்கும்” என்று கூறுகின்றார்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• فعل الطاعات من أهم أسباب الثبات على الدين.
1. நன்மையான காரியங்களில் ஈடுபடுவது மார்க்கத்தில் உறுதியாக நிலைத்து நிற்பதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகும்.

• أخذ الحيطة والحذر باتخاذ جميع الأسباب المعينة على قتال العدو، لا بالقعود والتخاذل.
2. முஸ்லிம் சமூகம் எதிரிகளை எதிர்ப்பதற்குத் தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பின்தங்கிவிடுதன் மூலமோ பலவீனப்படுவதன் மூலமோ அல்ல.

• الحذر من التباطؤ عن الجهاد وتثبيط الناس عنه؛ لأن الجهاد أعظم أسباب عزة المسلمين ومنع تسلط العدو عليهم.
3. போருக்குச் செல்லாமல் பின்தங்குவது மற்றும் மக்களை போருக்குச் செல்லவிடாமல் தடுப்பது ஆகியவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் போர் புரிவதுதான் முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும் அவர்கள் மீது எதிரிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாகும்.

 
Translation of the meanings Ayah: (72) Surah: An-Nisā’
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Translations’ Index

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

close