Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Ghāfir   Ayah:
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَیْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَیْكَ ؕ— وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚ— فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِیَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ۟۠
40.78. -தூதரே!- உமக்கு முன்னர் ஏராளமான தூதர்களை அவர்களின் சமூகங்களின்பால் நாம் அனுப்பியுள்ளோம். ஆயினும் அந்த மக்கள் தூதர்களை பொய்ப்பித்து அவர்களைத் துன்புறுத்தினார்கள். தூதர்கள் தாங்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுமையாக சகித்துக் கொண்டார்கள். அந்த தூதர்களில் சிலரின் செய்திகளை நாம் உமக்கு எடுத்துரைத்துள்ளோம்; சிலரின் செய்திகளை எடுத்துரைக்கவில்லை. எந்தவொரு தூதரும் தனது கூட்டத்திடம் தன் இறைவனின் நாட்டமின்றி எந்தவொரு சான்றையும் கொண்டுவர முடியாது. எனவே நிராகரிப்பாளர்கள் சான்றுகளைக் கொண்டுவருமாறு தமது தூதர்களிடம் வேண்டுகோள் விடுப்பது அநியாயமாகும். வெற்றியைக் கொண்டோ தூதர்களுக்கும் அந்த மக்களுக்கும் இடையே நியாயமான தீர்ப்பைக் கொண்டோ இறைவனின் கட்டளை வந்துவிட்டால் நிராகரிப்பாளர்கள் அழிக்கப்படுவார்கள், தூதர்கள் காப்பாற்றப்படுவார்கள். அப்போது அசத்தியவாதிகள் தமது நிராகரிப்பினால் தம்மை அழிவிற்கான காரணிகளில் இட்டுச்சென்று -அந்நிலைமையில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் போது- நஷ்டமடைந்துவிடுவார்கள்.
Arabic explanations of the Qur’an:
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟ؗ
40.79. அல்லாஹ்வே ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்காகப் படைத்துள்ளான். அவற்றில் சிலவற்றில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். சிலவற்றின் இறைச்சியை உண்கிறீர்கள்.
Arabic explanations of the Qur’an:
وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَیْهَا حَاجَةً فِیْ صُدُوْرِكُمْ وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟ؕ
40.80. அந்த படைப்பினங்களில் உங்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் புதுப்புது பல பயன்களும் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் விரும்பும் உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். அவற்றில் பிரதானமானது தரைப் பயணமும் கடல் பயணமுமாகும்.
Arabic explanations of the Qur’an:
وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ ۖۗ— فَاَیَّ اٰیٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ ۟
40.81. அவன் தான் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதையும் தன்னுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். அவனுடைய சான்றுகள் என்று உங்களிடம் உறுதியான பின்னர் எதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்?
Arabic explanations of the Qur’an:
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
40.82. இந்த நிராகரிப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து இதற்கு முன்னர் பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்து படிப்பினை பெற வேண்டாமா? அவர்கள் இவர்களை விட அதிக செல்வங்கள் பெற்றவர்களாவும் பலம்மிக்கவர்களாகவும் பூமியில் அதிக அடையாளங்களை விட்டுச்சென்றவர்களாகவும் இருந்தார்கள். அழிக்கக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் சேர்த்து வைத்த எந்த பலமும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
Arabic explanations of the Qur’an:
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
40.83. அவர்களது தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளையும் ஆதாரங்களையும் கொண்டு வந்தபோது அவற்றை அவர்கள் மறுத்தார்கள். தூதர்கள் கொண்டுவந்ததற்கு மாறாக தங்களிடமுள்ள அறிவைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தார்கள். அவர்கள் எந்த வேதனையைக் குறித்து பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களின் மீது இறங்கியது. அந்த வேதனையைக் குறித்துதான் தூதர்கள் அவர்களை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
Arabic explanations of the Qur’an:
فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِیْنَ ۟
40.84. நம்முடைய வேதனையை அவர்கள் காணும்போது, “நாங்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கைகொண்டோம். அவனைத் தவிர நாங்கள் வணங்கிக்கொண்டிருந்த இணைகள், சிலைகளை நிராகரித்துவிட்டோம்” என்று ஒப்புக்கொண்டவர்களாக கூறுவார்கள். அப்போது அவர்கள் ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
Arabic explanations of the Qur’an:
فَلَمْ یَكُ یَنْفَعُهُمْ اِیْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ— سُنَّتَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ فِیْ عِبَادِهٖ ۚ— وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ ۟۠
40.85. அவர்கள் மீது இறங்கும் நம்முடைய வேதனையை காணும் சமயத்தில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் அவர்களுக்கு எந்தப்பயனும் இல்லை. நிச்சயமாக வேதனையைக் காணும்போது அடியார்கள் கொள்ளும் நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்காது என்பதே அடியார்களின் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததன் காரணமாக, தண்டனையைக் காண முன் பாவமன்னிப்புக் கோராமல் இருந்ததன் மூலம் அழிவிற்கான காரணிகளைத் தேடி தண்டனை இறங்கும் போது நஷ்டமடைந்துவிட்டார்கள்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• لله رسل غير الذين ذكرهم الله في القرآن الكريم نؤمن بهم إجمالًا.
1. அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடாத தூதர்களும் இருக்கிறார்கள். நாம் அவர்களை பொதுவாக நம்பிக்கைகொள்ள வேண்டும்.

• من نعم الله تبيينه الآيات الدالة على توحيده.
2. தான் ஒருவனே என்பதை அறிவிக்கும் சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துவதும் அவனது அருட்கொடைகளில் உள்ளவையாகும்.

• خطر الفرح بالباطل وسوء عاقبته على صاحبه.
3. அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைவதால் ஏற்படும் தீய விளைவு தெளிவாகிறது.

• بطلان الإيمان عند معاينة العذاب المهلك.
4. அழிக்கும் வேதனையைக் காணும்போது கொள்ளப்படும் ஈமான் வீணானதாகும்.

 
Translation of the meanings Surah: Ghāfir
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close