Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
10 : 40

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَی الْاِیْمَانِ فَتَكْفُرُوْنَ ۟

40.10. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்கள் நரகத்தில் நுழையும் போது அவர்கள் அழைக்கப்பட்டு தம்மைத் தாமே வெறுத்து சபித்துக்கொள்ளும் போது, “நீங்கள் உங்களை வெறுப்பதைவிட அல்லாஹ் உங்களைக் கடுமையாக வெறுக்கிறான். உலகில் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ளுமாறு நீங்கள் அழைக்கப்பட்டபோது அவனை நிராகரித்துக்கொண்டிருந்தீர்கள். அவனுடன் வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தீர்கள். info
التفاسير: |
Benefits of the Verses on this page:
• مَحَلُّ قبول التوبة الحياة الدنيا.
1. உலக வாழ்வுதான் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும். info

• نفع الموعظة خاص بالمنيبين إلى ربهم.
2. தங்கள் இறைவனின் பக்கம் திரும்புபவர்களுக்கே அறிவுரை பயனளிக்கும். info

• استقامة المؤمن لا تؤثر فيها مواقف الكفار الرافضة لدينه.
3. நிராகரிப்பாளர்களின் இஸ்லாத்தை மறுக்கும் நிலைப்பாடுகள் நம்பிக்கையாளனின் உறுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. info

• خضوع الجبابرة والظلمة من الملوك لله يوم القيامة.
4. அநியாயக்கார, அடக்கியாளும் அரசர்கள் அனைவரும் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்துவிடுவார்கள். info