Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
46 : 41

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ— وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟

41.46. யார் நற்செயல் புரிவாரோ அதனால் ஏற்படும் நன்மை அவரையே சாரும். எவருடைய நற்செயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் இல்லை. யார் தீயசெயல் புரிவாரோ அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவனுடைய படைப்பினங்களில் எவருடைய தீயசெயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- உம் இறைவன் தன் அடியார்களின் மீது அநீதி இழைப்பவன் அல்ல. ஒரு போதும் அவர்களின் நன்மைகளை குறைத்துவிடவோ, தீமைகளை அதிகரித்துவிடவோ மாட்டான். info
التفاسير:
Benefits of the Verses on this page:
• حَفِظ الله القرآن من التبديل والتحريف، وتَكَفَّل سبحانه بهذا الحفظ، بخلاف الكتب السابقة له.
1. அல்லாஹ் குர்ஆனை திரிவுக்கும், மாற்றத்திற்கும் உள்ளாவதிலிருந்து பாதுகாத்துள்ளான். முந்தைய வேதங்களுக்கு மாறாக அதனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். info

• قطع الحجة على مشركي العرب بنزول القرآن بلغتهم.
2. குர்ஆன் இணைவைப்பாளர்களின் மொழியில் இறங்கியிருப்பதால் அரேபிய இணைவைப்பாளர்களுக்கு ஆதாரம் இல்லாமல் சென்றுவிட்டது. info

• نفي الظلم عن الله، وإثبات العدل له.
3. அநீதி இழைக்கும் பண்பு அல்லாஹ்வுக்கு இல்லையென மறுத்துரைக்கப்பட்டு அவன் நீதியானவன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. info