Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
48 : 43

وَمَا نُرِیْهِمْ مِّنْ اٰیَةٍ اِلَّا هِیَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا ؗ— وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

43.48. மூஸா கொண்டுவந்தது உண்மைதான் என்பதற்கு நாம் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தின் பிரதானிகளுக்கும் காட்டிய ஒவ்வொரு சான்றும் முந்தைய சான்றினைவிட பெரியதாகவே இருந்தது. அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பிலிருந்து திரும்பிவிடும்பொருட்டு உலகில் அவர்களை வேதனையால் பிடித்தோம். ஆயினும் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. info
التفاسير:
Benefits of the verses in this page:
• نَكْث العهود من صفات الكفار.
1. வாக்குறுதியை முறிப்பது நிராகரிப்பாளர்களின் பண்பாகும். info

• الفاسق خفيف العقل يستخفّه من أراد استخفافه.
2. பாவி புத்தி குறைந்தவனாக இருக்கின்றான். அவனை மூடனாக்க விரும்புபவர்கள் மூடனாக்கிவிடலாம். info

• غضب الله يوجب الخسران.
3. அல்லாஹ்வின் கோபம் நஷ்டத்தை அவசியமாக்கும். info

• أهل الضلال يسعون إلى تحريف دلالات النص القرآني حسب أهوائهم.
4. வழிகேடர்கள் தங்களின் மனஇச்சைக்கேற்ப குர்ஆனின் வார்த்தைகளின் கருத்தைத் திரிக்க முற்படுகிறார்கள். info