Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
18 : 44

اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ— اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ

44.18. மூஸா ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களாவர். அவர்களை அடிமைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதராவேன். அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கூறிய விஷயங்களில் நான் நம்பிக்கைக்குரியவனாவேன். அதில் எதையும் அதிகரித்துவிடவோ, குறைத்துவிடவோ மாட்டேன். info
التفاسير:
Benefits of the Verses on this page:
• نزول القرآن في ليلة القدر التي هي كثيرة الخيرات دلالة على عظم قدره.
1. நலவுகள் நிறைந்த லைலத்துல் கத்ர் என்னும் கண்ணியமிக்க இரவில் திருக்குர்ஆன் இறங்கியது அதன் பெரும் மதிப்பின் சான்றாகும். info

• بعثة الرسل ونزول القرآن من مظاهر رحمة الله بعباده.
2.தூதர்களை அனுப்புவதும் அல்குர்ஆன் இறங்குவதும் அல்லாஹ் தன் அடியார்கள் மீதுள்ள கருணையின் வெளிப்பாடாகும். info

• رسالات الأنبياء تحرير للمستضعفين من قبضة المتكبرين.
3. நபிமார்களின் தூதுகள் பலவீனமானவர்களை கர்வம் கொண்டவர்களின் பிடியிலிருந்து விடுதலை செய்வதாகும். info