Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-Qalam   Ayah:
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ— اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ
68.17. நாம் தோட்டவாசிகளை சோதித்ததுபோன்றே இந்த இணைவைப்பாளர்களை பசியாலும் பஞ்சத்தாலும் சோதித்தோம். அந்த தோட்டவாசிகள், அதிகாலைப் பொழுதில் விரைந்து சென்று தோட்டத்தின் கனிகளைப் பறித்துவிட வேண்டும். எந்த ஏழைக்கும் எதுவும் கொடுத்து விடக்கூடாது என்று சத்தியம் செய்தபோது
Arabic explanations of the Qur’an:
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
68.18. தங்களின் சத்தியத்தில் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.
Arabic explanations of the Qur’an:
فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟
68.19. அல்லாஹ் அந்த (தோட்டத்தின் மீது) நெருப்பை அனுப்பினான். அவர்களால் அதனை விட்டும் நெருப்பைத் தடுக்கமுடியாத தூக்கத்தில் அவர்கள் ஆழ்ந்திருந்த சமயத்தில் அதனை பொசுக்கிவிட்டது.
Arabic explanations of the Qur’an:
فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ
68.20. இருளான இரவைப் போன்று அது கருப்பாகிவிட்டது.
Arabic explanations of the Qur’an:
فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ
68.21. அவர்கள் காலை நேரத்தில் பின்வருமாறு கூறிக்கொண்டே ஒருவரையொருவர் அழைத்தார்கள்:
Arabic explanations of the Qur’an:
اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟
68.22. “நீங்கள் தோட்டத்தின் கனிகளைப் பறிப்பதாயிருந்தால் ஏழைகள் வருவதற்கு முன்னரே அதிகாலையிலேயே உங்கள் தோட்டத்திற்குப் புறப்படுங்கள்.” என்று கூறினார்கள்.
Arabic explanations of the Qur’an:
فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ
68.23. அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டே தங்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றார்கள்.
Arabic explanations of the Qur’an:
اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ
68.24. அவர்கள் ஒருவருக்கொருவர் கூறினார்கள்: “இன்றைய தினம் எந்த ஏழையும் உங்களின் தோட்டத்திற்கு வந்துவிடவே கூடாது.”
Arabic explanations of the Qur’an:
وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟
68.25. அவர்கள் கனிகளை (பறித்து அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்காமல்) தடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டோராக அதிகாலையில் புறப்பட்டனர்.
Arabic explanations of the Qur’an:
فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ
68.26. அது எரிந்திருப்பதை அவர்கள் கண்டபோது, “நாம் தோட்டத்தின் வழி நமக்குத் தவறிவிட்டது” என ஒருவருக்கொருவர் கூறினார்கள்.
Arabic explanations of the Qur’an:
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
68.27. மாறாக நாம் அதன் கனிகளை ஏழைகளுக்குக் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொள்வதற்கு உறுதியாக நாம் முடிவெடுத்ததனால் அதன் கனிகளைப் பறிப்பதை விட்டும் தடுக்கப்பட்டவர்களாகிவிட்டோம்.”
Arabic explanations of the Qur’an:
قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟
68.28. அவர்களில் சிறந்தவர் கூறினார்: “நீங்கள் ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவுசெய்தபோது ‘நீங்கள் அல்லாஹ்வின் துதிபாட வேண்டாமா? அவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டாமா?’ என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”
Arabic explanations of the Qur’an:
قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
68.29. அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் பரிசுத்தமானவன். நம் தோட்டத்தின் கனிகளிலிருந்து ஏழைகளுக்குக் கொடுக்கக்கூடாது என்று நாங்கள் முடிவுசெய்து நிச்சயமாக எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம்.”
Arabic explanations of the Qur’an:
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟
68.30. அவர்கள் ஒருவரையொருவர் தங்கள் பேசும்போது பழிக்கலானார்கள்.
Arabic explanations of the Qur’an:
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟
68.31. வேதனையுடன் அவர்கள் கூறினார்கள்: “எங்கள் நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் ஏழைகளின் உரிமையை தடுத்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருந்தோம்.
Arabic explanations of the Qur’an:
عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟
68.32. எங்களின் இறைவன் இந்த தோட்டத்தைவிட சிறந்த ஒன்றை எங்களுக்கு வழங்கலாம். நிச்சயமாக நாங்கள் அவனிடம் மட்டுமே ஆதரவு வைக்கின்றோம். அவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்கின்றோம். அவனிடம் நலவை வேண்டுகிறோம்.
Arabic explanations of the Qur’an:
كَذٰلِكَ الْعَذَابُ ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
68.33. இத்தண்டனை போன்றே வாழ்வாதாரத்தை தடுப்பதன் மூலம் நாம் நம் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை தண்டிக்கின்றோம். அவர்கள் மறுமையின் வேதனையின் கடுமையையும் நிரந்தரத்தையும் அறிந்திருந்தால் அது மிக மகத்தானதாகும்.
Arabic explanations of the Qur’an:
اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
68.34. நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவனிடம் அருட்கொடைகள் நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் அதில் குதூகலமாக இருப்பார்கள். அவர்களின் இன்பம் முடிவுறாதது.
Arabic explanations of the Qur’an:
اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ
68.35. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் எண்ணுவதுபோல நாம் கூலி வழங்குவதில் முஸ்லிம்களை நிராகரிப்பாளர்களைப் போன்று ஆக்கி விடுவோமோ என்ன?
Arabic explanations of the Qur’an:
مَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ
68.36. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு என்னவாயிற்று? ஏவ்வாறு அநீதியாக, கோணலாக இந்த தீர்ப்பை அளிக்கின்றீர்கள்?
Arabic explanations of the Qur’an:
اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ
68.37. அல்லது உங்களிடம் ஒரு வேதம் இருக்கின்றதா? அதில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுபவர்களும் மாறுசெய்பவர்களும் சமமானவர்கள் என்று நீங்கள் படிக்கின்றீர்களா?
Arabic explanations of the Qur’an:
اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ
68.38. அந்த வேதத்தில் மறுமையில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளதா?
Arabic explanations of the Qur’an:
اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ— اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ
68.39. அல்லது நீங்கள் விரும்புபவை உங்களுக்கு உண்டு என்ற சத்திய வாக்குறுதிகளை எம்மிடம் பெற்றுள்ளீர்களா?
Arabic explanations of the Qur’an:
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
68.40. -தூதரே!- இவ்வாறு கூறுபவர்களிடம் நீர் கேட்பீராக: அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளன், என்று.”
Arabic explanations of the Qur’an:
اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ— فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟
68.41. அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து இணைதெய்வங்கள் இருக்கின்றவா? அவை அவர்களையும் நம்பிக்கையாளர்களையும் கூலியில் சமமாக்குகின்றனவா? அவர்களை நம்பிக்கையாளர்களோடு கூலியில் அவர்களின் இணைதெய்வங்கள் சமமாக்குவார்கள் என்ற வாதத்தில் நிச்சயமாக அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் இந்த இணைத்தெய்வங்களை அழைத்து வரட்டும்.
Arabic explanations of the Qur’an:
یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ
68.42. மறுமை நாளில் பயங்கரம் வெளிப்பட்டுவிடும். நமது இறைவன் தனது கெண்டைக்காலை திறப்பான். மக்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். நம்பிக்கையாளர்கள் சிரம்பணிவார்கள். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் சிரம்பணிய முடியாமல் எஞ்சியிருப்பார்கள்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• منع حق الفقير سبب في هلاك المال.
1. ஏழையின் உரிமையை வழங்காமல் தடுத்துக் கொள்வது சொத்தின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றது.

• تعجيل العقوبة في الدنيا من إرادة الخير بالعبد ليتوب ويرجع.
2. உலகில் தண்டனை உடனடியாக வழங்கப்படுவது திருந்துவதற்கான, மீளுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதால் அடியானுக்கு நலவை நாடுவதாகவே அமைந்துள்ளது.

• لا يستوي المؤمن والكافر في الجزاء، كما لا تستوي صفاتهما.
3. நம்பிக்கையாளனும் நிராகரிப்பாளனும் பண்புகளில் சரிசமமாக மாட்டார்கள் என்பது போல கூலியிலும் சமமாக மாட்டார்கள்.

 
Translation of the meanings Surah: Al-Qalam
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close