Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-Hāqqah   Ayah:
وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ
69.36. நரகவாசிகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் சீழ்சலங்களைத் தவிர அவனுக்கு உண்ணக்கூடிய வேறு எந்த உணவும் இல்லை.
Arabic explanations of the Qur’an:
لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠
69.37. பாவிகள்தாம் அந்த உணவை உண்பார்கள்.
Arabic explanations of the Qur’an:
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
69.38. நீங்கள் பார்க்கக்கூடியதைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.
Arabic explanations of the Qur’an:
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
69.39. நீங்கள் பார்க்காததைக்கொண்டும் அவன் சத்தியம் செய்துள்ளான்.
Arabic explanations of the Qur’an:
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ
69.40. நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகும். கண்ணியமிக்க அவனுடைய தூதர் அதனை மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
Arabic explanations of the Qur’an:
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ— قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ
69.41. அது ஒரு கவிஞரின் சொல்லல்ல. ஏனெனில் அது கவிதை வடிவில் இல்லை. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கைகொள்கிறீர்கள்.
Arabic explanations of the Qur’an:
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ— قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
69.42. அது ஒரு சோதிடரின் சொல்லல்ல. சோதிட வார்த்தை குர்ஆனுக்கு முற்றிலும் மாறான ஒரு விடயமாகும். நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.
Arabic explanations of the Qur’an:
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
69.43. ஆயினும் அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
Arabic explanations of the Qur’an:
وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ
69.44. முஹம்மது நாம் கூறாதவற்றை நம்மீது புனைந்து கூறியிருந்தால்
Arabic explanations of the Qur’an:
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ
45. நாம் அவரைத் தண்டித்திருப்போம். தம் வல்லமையால், பலத்தால் அவரது (வலக்கையைப்) பிடித்திருப்போம்.
Arabic explanations of the Qur’an:
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ
69.46. பின்னர் அவரது இதயத்திற்குச் செல்லும் நரம்பைத் துண்டித்திருப்போம்.
Arabic explanations of the Qur’an:
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟
69.47. அவரை விட்டும் உங்களில் யாராலும் நம்மைத் தடுக்க முடியாது. எனவே உங்களுக்காக நம்மீது அவர் புனைந்துகூறுவது சாத்தியமற்றதாகும்.
Arabic explanations of the Qur’an:
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
69.48. நிச்சயமாக குர்ஆன் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அறிவுரையாக இருக்கின்றது.
Arabic explanations of the Qur’an:
وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟
69.49. நிச்சயமாக உங்களில் இக்குர்ஆனைபொய்ப்பிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
Arabic explanations of the Qur’an:
وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟
69.50. நிச்சயமாக குர்ஆனை பொய்ப்பிப்பது மறுமை நாளில் மாபெரும் கைசேதமாகும்.
Arabic explanations of the Qur’an:
وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟
69.51. நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்த சந்தேகமற்ற உறுதியான சத்தியமாகும்.
Arabic explanations of the Qur’an:
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
69.52. -தூதரே!- உம் இறைவனுக்குப் பொருத்தமில்லாதவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துவீராக. மகத்தான உம் இறைவனின் பெயரை நினைவுகூர்வீராக.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• تنزيه القرآن عن الشعر والكهانة.
1. கவிதை, ஜோதிடம் ஆகியவற்றைவிட்டும் குர்ஆன் தூய்மையானது.

• خطر التَّقَوُّل على الله والافتراء عليه سبحانه.
2. அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிக் கூறுவதன் விபரீதம்.

• الصبر الجميل الذي يحتسب فيه الأجر من الله ولا يُشكى لغيره.
3. அழகான பொறுமை என்பது அல்லாஹ்விடமிருந்து கூலியை எதிர்பார்த்து ஏனையவர்களிடம் முறையீடு செய்யாமல் இருப்பதாகும்.

 
Translation of the meanings Surah: Al-Hāqqah
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close