Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-A‘rāf   Ayah:
وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰی عِلْمٍ هُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
ولقد جئناهم بهذا القرآن الذي هو كتاب منزل على محمد صلى الله عليه وسلم، وقد بيَّناه على علم منا بما نبينه، وهو هاد للمؤمنين إلى طريق الرشد والحق، ورحمة بهم لما فيه من الدلالة على خيري الدنيا والآخرة.
7.52. முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனை நாம் அவர்களிடம் கொண்டுவந்தோம். நம் புறத்திலுள்ள அறிவைக் கொண்டு நாம் அதனைத் தெளிவுபடுத்திவிட்டோம். இது நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியைக் காட்டக்கூடியதாகும். மேலும் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளுக்கான வழிகாட்டல் இதில் உள்ளடங்கியுள்ளதால் முஃமின்களுக்கு அது அருளும் ஆகும்.
Arabic explanations of the Qur’an:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا تَاْوِیْلَهٗ ؕ— یَوْمَ یَاْتِیْ تَاْوِیْلُهٗ یَقُوْلُ الَّذِیْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۚ— فَهَلْ لَّنَا مِنْ شُفَعَآءَ فَیَشْفَعُوْا لَنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ— قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
ما ينتظر الكفار إلا وقوع ما أُخبروا بوقوعه من العذاب الأليم الذي يؤول إليه أمرهم في الآخرة، يوم يأتي ما أخبروا به من ذلك، وما أخبر به المؤمنون من الثواب، يقول الذين نسوا القرآن في الدنيا، ولم يعملوا بما جاء فيه: لقد جاءت رسل ربنا بالحق الذي لا مرية فيه، ولا شك أنه من عند الله، فليت لنا وسطاء يشفعون لنا عند الله ليعفينا من العذاب، أو ليتنا نرجع إلى الحياة الدنيا لنعمل عملًا صالحًا ننجو به بدل ما كنا نعمل من السيئات، قد خسر هؤلاء الكافرون أنفسهم بإيرادها موارد الهلاك بسبب كفرهم، وغاب عنهم من كانوا يعبدونهم من دون الله، فلم ينفعوهم.
7.53. இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வேதனை மிக்க தண்டனை கிடைப்பதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வேதனையும் நம்பிக்கையாளர்களுக்குக் கூறப்பட்டிருந்த நற்கூலியும் வரும் நாளில் இவ்வுலகில் குர்ஆனை மறந்து அதன்படி செயல்படாதவர்கள் கூறுவார்கள்: “எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு எங்களிடம் வந்தார்கள். அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தோ! வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்துரை செய்பவர்கள் இருக்க வேண்டுமே! அந்தோ! நாம் மீண்டும் உலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு நாம் செய்த தீய செயல்களுக்குப் பகரமாக தப்பிக்கொள்வதற்கான நற்செயல்களில் ஈடுபட வேண்டுமே!.” இந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்பினால் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்திக் கொண்டார்கள். அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். அவை அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
Arabic explanations of the Qur’an:
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۫— یُغْشِی الَّیْلَ النَّهَارَ یَطْلُبُهٗ حَثِیْثًا ۙ— وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ ؕ— اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ— تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
إن ربكم - أيها الناس - هو الله الذي خلق السماوات وخلق الأرض على غير مثال سابق في ستة أيام، ثم علا وارتفع سبحانه على العرش علوًّا يليق بجلاله لا ندرك كيفيته، يُذْهِب ظلام الليل بضياء النهار، وضياء النهار بظلام الليل، وكل منهما يطلب الآخر طلبًا سريعًا بحيث لا يتأخر عنه، فإذا ذهب هذا دخل هذا، وخلق سبحانه الشمس، وخلق القمر، وخلق النجوم مُذَلَّلات مُهَيَّآت، ألا لله وحده الخلق كله، فمن خالق غيره؟! وله الأمر وحده، وعظم خيره وكثر إحسانه، فهو المتصف بصفات الجلال والكمال، رب العالمين.
7.54. மனிதர்களே! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி ஆறுநாட்களில் படைத்தவனே உங்கள் இறைவனாவான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். நம்மால் அது எவ்வாறு என்பதை உணர்ந்து கொள்ள முடியாது அவன் இரவின் இருளை பகலின் வெளிச்சத்தைக் கொண்டும் பகலின் வெளிச்சத்தை இரவின் இருளைக் கொண்டும் போக்குகிறான். அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை வேகமாக தாமதமின்றி பின்தொடர்கிறது. இது சென்றுவிட்டால் அது நுழைந்து விடும். அவன் சூரியனையும் சந்திரனையும் படைத்துள்ளான். வசப்படுத்தப்பட்டுள்ள நட்சத்திரங்களையும் படைத்துள்ளான். அறிந்து கொள்ளுங்கள், படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைத் தவிர வேறு படைப்பாளன் இருக்கிறானா? அதிகாரம் அனைத்தும் அவனிடமே உள்ளது. அவன் நலவும் உபகாரமும் மகத்தானதும் அதிகமானதுமாகும். கண்ணியம், பரிபூரணம் ஆகிய பண்புகளை உடைய அவன் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனாவான்.
Arabic explanations of the Qur’an:
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْیَةً ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟ۚ
ادعوا - أيها المؤمنون - ربكم بتذلل تام وتواضع خفية وسرًّا، مخلصين في الدعاء غير مرائين ولا مشركين به سبحانه غيره في الدعاء، إنه لا يحب المتجاوزين لحدوده في الدعاء، ومن أعظم التجاوز لحدوده في الدعاء دعاء غيره معه كما يفعل المشركون.
7.55. நம்பிக்கையாளர்களே! உங்கள் இறைவனை பூரண பணிவோடும், இரகசியமாகவும் முகஸ்துதி இல்லாமலும் பிரார்த்தனையில் மற்றவர்களை அவனுக்கு இணையாக்காமலும் உளத்தூய்மையோடு அழையுங்கள். நிச்சயமாக, பிரார்த்தனையில் தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை. இணைவைப்பாளர்களைப் போல், அல்லாஹ்வுடன் மற்றவர்களிடமும் பிரார்த்தனை செய்வது பாரதூரமான வரம்பு மீறல்களிலுள்ளதாகும்.
Arabic explanations of the Qur’an:
وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ— اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِیْبٌ مِّنَ الْمُحْسِنِیْنَ ۟
ولا تفسدوا في الأرض بارتكاب المعاصي بعد أن أصلحها الله بإرسال الرسل عليهم السلام وإعمارها بطاعته وحده، وادعوا الله وحده مستشعرين الخوف من عقابه، ومنتظرين حصول ثوابه، إن رحمة الله قريب من المحسنين، فكونوا منهم.
7.56. தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்தி அவனை மாத்திரம் வழிபடுவதன் மூலம் செழிப்பாக்கிய பிறகு பாவங்கள் புரிந்து அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சியவர்களாக, அவனுடைய நன்மையில் ஆசைகொண்டவர்களாக அவனையே அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு நெருக்கமாகவே இருக்கின்றது. எனவே நன்மை செய்பவர்களில் ஆகிவிடுங்கள்.
Arabic explanations of the Qur’an:
وَهُوَ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ— حَتّٰۤی اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّیِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ— كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰی لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
والله سبحانه هو الذي يرسل الرياح مُبَشِّرات بالمطر، حتى إذا حملت الرياح السحاب المُثْقَل بالماء سُقنا السحاب إلى بلد مُجْدِب فأنزلنا بالبلد الماء، فأخرجنا بالماء من جميع أنواع الثمار، مثل إخراج الثمر على تلك الصورة نخرج الموتى من قبورهم أحياء، فعلنا ذلك رجاء أنكم - أيها الناس - تتذكرون قدرة الله وبديع صنعه، وأنه قادر على إحياء الموتى.
7.57. அல்லாஹ்தான் காற்றை மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவையாக அனுப்புகிறான். காற்று, நீர் நிரம்பிய கனமான மேகங்களைச் சுமந்தால் நாம் அந்த மேகத்தை பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஊருக்குக் கொண்டு சென்று அங்கு மழையைப் பொழியச் செய்கின்றோம். அந்த மழையின் மூலம் எல்லா வகையான விளைச்சல்களையும் வெளிப்படுத்துகின்றோம். விளைச்சலை வெளிப்படுத்துவது போன்றே நாம் இறந்தவர்களை அடக்கஸ்த்தலத்திலிருந்து உயிரோடு வெளிப்படுத்துகின்றோம். மனிதர்களே! அல்லாஹ்வின் ஆற்றலையும் வியக்கத்தக்க செயலையும், அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதையும் நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டே நாம் இவ்வாறு செய்தோம்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• القرآن الكريم كتاب هداية فيه تفصيل ما تحتاج إليه البشرية، رحمة من الله وهداية لمن أقبل عليه بقلب صادق.
1. குர்ஆன் நேர்வழிகாட்டும் வேதமாகும். அதில் மனிதனுக்குத் தேவையான அனைத்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அது அல்லாஹ்வின் கருணையின் காரணமாகவும் உண்மையான எண்ணத்துடன் அவனை நோக்கி வருவோருக்கு வழிகாட்டுவதற்காகவுமே இவ்வாறு செய்துள்ளான்.

• خلق الله السماوات والأرض في ستة أيام لحكمة أرادها سبحانه، ولو شاء لقال لها: كوني فكانت.
2. வானங்களையும் பூமியையும் தான் விரும்பும் ஒரு நோக்கத்திற்காகவே அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்துள்ளான். அவன் நாடியிருந்தால் ‘ஆகு’ என்று கூறியிருப்பான். அது ஆகியிருக்கும்.

• يتعين على المؤمنين دعاء الله تعالى بكل خشوع وتضرع حتى يستجيب لهم بفضله.
3. அல்லாஹ் தன் அருளால் தமக்குப் பதிலளிக்க வேண்டுமெனில் பூரண பணிவோடும் உள்ளச்சத்தோடும் அவனிடம் பிரார்த்திப்பது நம்பிக்கையாளர்களின் மீது அவசியமாகும்.

• الفساد في الأرض بكل صوره وأشكاله منهيٌّ عنه.
4. பூமியில் குழப்பம் ஏற்படுத்தும் அனைத்து முறைகளும் தடைசெய்யப்பட்டவையே.

 
Translation of the meanings Surah: Al-A‘rāf
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close