Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Translations’ Index


Translation of the meanings Ayah: (48) Surah: Al-A‘rāf
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
7.48. அஃராப்வாசிகள் நரகவாசிகளான சில நிராகரிப்பாளர்களை இருள் படிந்த அவர்களின் முக அடையாளங்களைக் கொண்டும் நீலம் பூத்த அவர்களின் கண்களைக் கொண்டும் அறிந்து கூறுவார்கள்: “நீங்கள் சேகரித்து வைத்த அதிகமான சொத்துக்களும் ஆட்களும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை. கர்வம் கொண்டு சத்தியத்தை நீங்கள் புறக்கணித்ததும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை.”
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• عدم الإيمان بالبعث سبب مباشر للإقبال على الشهوات.
1. மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது இச்சைகளின் மீது மோகம் கொள்வதற்கான நேரடிக் காரணமாகும்.

• يتيقن الناس يوم القيامة تحقق وعد الله لأهل طاعته، وتحقق وعيده للكافرين.
2. அல்லாஹ் தன்னை வழிப்பட்டோருக்கு அளித்த வாக்குறுதியும் நிராகரிப்பாளர்களுக்கு வாக்களித்த எச்சரிக்கையும் உண்மையானதே என்பதை மக்கள் உறுதியாக மறுமை நாளில் அறிந்து கொள்வார்கள்.

• الناس يوم القيامة فريقان: فريق في الجنة وفريق في النار، وبينهما فريق في مكان وسط لتساوي حسناتهم وسيئاتهم، ومصيرهم إلى الجنة.
3. மறுமை நாளில் மனிதர்கள் சுவனவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவினராக இருப்பார்கள். அவையிரண்டுக்குமிடையில் ஒரு மத்திய பகுதியில் நன்மைகளும் தீமைகளும் சமமாகிவிட்ட மூன்றாவது பிரிவினரும் இருப்பார்கள். அவர்களது முடிவு சுவர்க்கமே.

• على الذين يملكون المال والجاه وكثرة الأتباع أن يعلموا أن هذا كله لن يغني عنهم من الله شيئًا، ولن ينجيهم من عذاب الله.
4. பணம், பதவி மற்றும் தன்னைப் பின்பற்றும் பெரும் கூட்டத்தினரைப் பெற்றவர்கள், அவையனைத்தும் அல்லாஹ்விடம் எந்தப் பயனையும் அளிக்காது என்பதையும் அவை நரக வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

 
Translation of the meanings Ayah: (48) Surah: Al-A‘rāf
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Translations’ Index

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

close