Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-A‘lā   Ayah:

ஸூரா அல்அஃலா

Purposes of the Surah:
تذكير النفس بالحياة الأخروية، وتخليصها من التعلقات الدنيوية.
மறுமை வாழ்வைக்கொண்டு ஆன்மாவுக்கு ஞாபகமூட்டலும், உலகத் தொடர்புகளை விட்டும் அதனை விடுவித்தலும்

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
87.1. தனது படைப்பினங்களுக்கு மேல் உயர்ந்துவிட்ட உம் இறைவனை ஞாபகம் செய்து மகத்துவப்படுத்தும் போது அவனது பெயரை மொழிந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக.
Arabic explanations of the Qur’an:
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟
87.2. அவனே மனிதனைச் நேர்த்தியாகவும் செம்மையாகவும் படைத்தான்.
Arabic explanations of the Qur’an:
وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟
87.3. அவனே படைப்புகளின் இனங்களையும் வகைகளையும் பண்புகளையும் நிர்ணயம் செய்து ஒவ்வொரு படைப்பிற்கும் அதற்குப் பொருத்தமானவற்றின்பால் வழிகாட்டினான்.
Arabic explanations of the Qur’an:
وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟
87.4. அவனே பூமியிலிருந்து உங்கள் கால்நடைகள் மேயக்கூடியவற்றை வெளிப்படுத்தினான்.
Arabic explanations of the Qur’an:
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ
87.5. பின்னர் பசுமையாக இருந்த அவற்றை கருத்த, காய்ந்த கூளங்களாக்குகிறான்.
Arabic explanations of the Qur’an:
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ
87.6. -தூதரே!- நாம் உமக்குக் குர்ஆனைப் படித்துக் காட்டுவோம். உம் உள்ளத்தில் அதனை ஒன்றுசேர்ப்போம். நீர் ஒருபோதும் அதனை மறக்க மாட்டீர். எனவே மறந்துவிடக் கூடாது என்ற ஆர்வத்தில் நீர் ஏற்கனேவே செய்தது போன்று படிப்பதில் ஜிப்ரீலை முந்திக்கொள்ளாதீர்.
Arabic explanations of the Qur’an:
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ
87.7. ஆயினும் அல்லாஹ் ஒரு நோக்கத்திற்காக நீர் மறக்க வேண்டும் என நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைவானதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic explanations of the Qur’an:
وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ
87.8. சுவனத்தில் நுழையச் செய்யும் அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடுவதை உமக்கு எளிதாக்கித் தருவோம்.
Arabic explanations of the Qur’an:
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ
87.9. நாம் உமக்கு வஹியாக அறிவிக்கும் குர்ஆனை மக்களுக்கு அறிவுரை வழங்குவீராக. அறிவுரை கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்வரை நினைவூட்டிக் கொண்டேயிருப்பீராக.
Arabic explanations of the Qur’an:
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ
87.10. அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் உம் அறிவுரைகளைக் கொண்டு அறிவுரை பெறுவார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அறிவுரையைக் கொண்டு பயனடைபவர்கள்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• تحفظ الملائكة الإنسان وأعماله خيرها وشرها ليحاسب عليها.
1. வானவர்கள் மனிதனின் விசாரணைக்காக அவனது நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தையும் பாதுகாக்கிறார்கள்.

• ضعف كيد الكفار إذا قوبل بكيد الله سبحانه.
2. அல்லாஹ்வின் சூழ்ச்சியோடு ஒப்பிடுகையில் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி பலவீனமானதாகும்.

• خشية الله تبعث على الاتعاظ.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் அறிவுரை பெற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.

وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
87.11. நிராகரிப்பாளன் அறிவுரை பெறுவதை விட்டும் தூரமாகி விரண்டோடுகிறான். ஏனெனில் நிச்சயமாக அவன் நரகில் நுழைவதால் மறுமை நாளில் அவனே மக்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக இருப்பான்.
Arabic explanations of the Qur’an:
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
87.12. அவன் பெரும் நரக நெருப்பில் வீழ்வான். அதன் வெப்பத்தை என்றென்றும் அனுபவிப்பான்.
Arabic explanations of the Qur’an:
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
87.13. பின்னர் அவன் அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். அவன் அனுபவிக்கும் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவனால் மரணிக்கவும் முடியாது, நல்ல கண்ணியாமாக முறையில் உயிர் வாழவும் முடியாது.
Arabic explanations of the Qur’an:
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
87.14. இணைவைப்பு மற்றும் பாவங்களைவிட்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வேண்டியதைப் பெற்று வெற்றியடைந்து விட்டார்.
Arabic explanations of the Qur’an:
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
87.15. அவர் தம் இறைவன் அனுமதித்த நினைவூட்டல்களைக்கொண்டு அவனை நினைவுகூர்ந்தார், நிறைவேற்றுமாறு வேண்டப்பட்ட முறையில் தொழுகையை நிறைவேற்றினார்.
Arabic explanations of the Qur’an:
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
87.16. மாறாக மறுமைக்கும் இம்மைக்கும் மத்தியில் பாரிய ஏற்றத்தாழ்வு இருந்தும் நீங்கள் மறுமையை தேர்ந்தெடுப்பதை விட இவ்வுலக வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கிறீர்கள்.
Arabic explanations of the Qur’an:
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
87.17. இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள இன்பங்களை விட மறுமையே சிறந்தது, நிலையானது. ஏனெனில் மறுமையின் இன்பங்கள் நிலையானது, என்றும் முடிவடையாதது.
Arabic explanations of the Qur’an:
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
87.18. நிச்சயமாக நாம் உங்களுக்கு நினைவூட்டிய இக்கட்டளைகளும் செய்திகளும் அல்குர்ஆனுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதங்களில் (ஆகமங்களில்) உள்ளவையாகும்.
Arabic explanations of the Qur’an:
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
87.19. அவை இப்ராஹீம் மற்றும் மூஸாவின் மீது இறக்கப்பட்ட வேதங்களாகும் (ஆகமங்களாகும்).
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• أهمية تطهير النفس من الخبائث الظاهرة والباطنة.
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அழுக்குகளைவிட்டும் மனதைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• الاستدلال بالمخلوقات على وجود الخالق وعظمته.
2. படைப்பினங்கள் படைப்பாளனின் இருப்பிற்கும் வல்லமைக்குமான சான்றுகளாகும்.

• مهمة الداعية الدعوة، لا حمل الناس على الهداية؛ لأن الهداية بيد الله.
3. அழைப்பாளனின் கடமை எடுத்துரைப்பது மட்டுமே. மக்களை நேர்வழியில் செலுத்துவது அவன்மீதுள்ள கடமையல்ல. ஏனெனில் நிச்சயமாக நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது.

 
Translation of the meanings Surah: Al-A‘lā
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Translations’ Index

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

close