Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: At-Tawbah   Ayah:
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ— وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
9.73. தூதரே! நிராகரிப்பாளர்களுடன் ஆயுதங்களைக் கொண்டும் நயவஞ்சகர்களுடன் நாவைக் கொண்டும் ஆதாரங்களைக் கொண்டும் ஜிஹாது செய்வீராக. இரு பிரிவினரிடமும் கடுமையாக நடந்து கொள்வீராக. ஏனெனில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள். மறுமை நாளில் அவர்களிடம் இருப்பிடம் நரகமாகும். அது அவர்களின் இருப்பிடங்களில் மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
Arabic explanations of the Qur’an:
یَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ— وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ یَنَالُوْا ۚ— وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ— فَاِنْ یَّتُوْبُوْا یَكُ خَیْرًا لَّهُمْ ۚ— وَاِنْ یَّتَوَلَّوْا یُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِیْمًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَمَا لَهُمْ فِی الْاَرْضِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
9.74. நாம் உம்மைத் திட்டி, உமது மார்க்கத்தைக் குறை கூறியதாக உமக்குக் கிடைத்த தகவல் தவறானது அவ்வாறு தாம் எதுவும் கூறவில்லை என்று நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நிராகரிப்புக்குரிய அவற்றைக் கூறியே உள்ளனர். அவர்கள் ஈமானை வெளிப்படுத்திய பிறகு நிராகரிக்கும் வார்த்தையைக் கூறிவிட்டார்கள். நபியவர்களை படுகொலை செய்வதற்குக் கூட முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை. யாரும் மறுக்காத ஒன்றை அவர்கள் மறுத்துள்ளனர். அதுதான் தன் தூதருக்கு அளித்த போர்ச் செல்வங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியதாகும். தங்களின் நயவஞ்சகத்தனத்திலிருந்து அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டால் அதிலே தொடர்ந்திருப்பதை விட அது அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ்விடம் மீளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டால் இவ்வுலகில் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் மறுமையில் நெருப்பினால் வேதனை செய்தும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ அதனைத் தடுக்கும் உதவியாளர்களோ அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
Arabic explanations of the Qur’an:
وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِیْنَ ۟
9.75. நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்விடம் பின்வருமாறு வாக்குறுதியளித்தார்கள்: “அல்லாஹ் எங்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கினால் நாங்கள் தேவையுடையவர்களுக்குத் தர்மம் செய்து நற்செயல்களைச் செய்யும் நல்லவர்களாக ஆகிவிடுவோம்.”
Arabic explanations of the Qur’an:
فَلَمَّاۤ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
9.76. அல்லாஹ் அவர்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கிய போது, அவர்கள் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தர்மம் செய்யாமல் தமது சொத்துக்களை தடுத்துக் கொண்டனர். ஈமான் கொள்வதை விட்டும் புறக்கணித்தவர்களாக திரும்பிச் சென்றனர்.
Arabic explanations of the Qur’an:
فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِیْ قُلُوْبِهِمْ اِلٰی یَوْمِ یَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
9.77. அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டு பொய்யுரைத்ததனால் அவர்களின் உள்ளங்களில் மறுமை நாள் வரை நிலையான நயவஞ்சகத்தை அவர்களுக்குரிய தண்டனையாக ஆக்கிவிட்டான்.
Arabic explanations of the Qur’an:
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُیُوْبِ ۟ۚ
9.78. இந்த நயவஞ்சகர்கள் தமது அவைகளில் இரகசியமாகத் தீட்டும் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும் அவன் மறைவானவற்றை நன்கறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? அவர்கள் செய்யக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic explanations of the Qur’an:
اَلَّذِیْنَ یَلْمِزُوْنَ الْمُطَّوِّعِیْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیْنَ لَا یَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَیَسْخَرُوْنَ مِنْهُمْ ؕ— سَخِرَ اللّٰهُ مِنْهُمْ ؗ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
9.79. சாதாரணமான தர்மப் பொருள்களை தன்னார்வமாக வழங்கும் சிறிது பொருள்களேயுடைய நம்பிக்கையாளர்களை அவர்கள் குறை கூறுகிறார்கள். அதுவே அவர்களது ஆற்றலுக்குட்பட்டது. “இவர்களின் தர்மங்களால் என்ன பயன்?” என்று அவர்களைக் கேலி செய்கிறார்கள். நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்யும் இவர்களை அல்லாஹ் பரிகாசம் செய்கிறான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• وجوب جهاد الكفار والمنافقين، فجهاد الكفار باليد وسائر أنواع الأسلحة الحربية، وجهاد المنافقين بالحجة واللسان.
1. நிராகரிப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் ஜிஹாது செய்வது கட்டாயமாகும். நிராகரிப்பாளர்களுடன், கையினாலும் ஏனைய யுத்த ஆயுதங்களைக் கொண்டும் நயவஞ்சகர்களுடன், ஆதாரங்களைக் கொண்டும் நாவின் மூலமும் ஜிஹாது செய்ய வேண்டும்.

• المنافقون من شرّ الناس؛ لأنهم غادرون يقابلون الإحسان بالإساءة.
2. மனிதர்களில் மிகவும் மோசமானர்கள் நயவஞ்சகர்களாவர். ஏனெனில் அவர்கள் நன்மையை தீமையால் எதிர்கொள்ளும் துரோகிகளாவர்.

• في الآيات دلالة على أن نقض العهد وإخلاف الوعد يورث النفاق، فيجب على المسلم أن يبالغ في الاحتراز عنه.
3. ஒப்பந்தத்தை மீறுவது வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவது என்பன உள்ளத்தில் நயவஞ்சகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாகும். எனவே அதனைத் தவிர்ந்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்துவது ஒரு முஸ்லிமின் மீது கடமையாகும்.

• في الآيات ثناء على قوة البدن والعمل، وأنها تقوم مقام المال، وهذا أصل عظيم في اعتبار أصول الثروة العامة والتنويه بشأن العامل.
4. உடல் மற்றும் உழைப்பின் வலிமையைப் புகழ்ந்தும் அது பணத்துக்கு நிகரானது எனவும் இவ்வசனங்கள் குறிப்பிடுகின்றன. இது செல்வத்தின் பொது மூலதனங்களைக் கவனத்தில் கொள்வதிலும் தொழிலாளியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும் முக்கிய அடிப்படையாகும்.

 
Translation of the meanings Surah: At-Tawbah
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close