Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
26 : 10

لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ— وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
27 : 10

وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ— وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ— كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

தீமைகளை செய்தவர்கள் தீமையின் கூலி(யாக) அது போன்ற(தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! அவர்களை இழிவு சூழும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் ஒருவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பாகத்தால் அவர்களுடைய முகங்கள் சூழப்பட்டதைப் போன்று இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
28 : 10

وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ— فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்... பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி “நீங்களும் உங்கள் இணை(தெய்வங்)களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். அவர்களுக்கிடையில் (தொடர்பை) நீக்கி விடுவோம். “நீங்கள் எங்களை வணங்கி கொண்டிருக்கவில்லை” என்று அவர்களுடைய இணை(தெய்வங்)கள் கூறும். info
التفاسير:

external-link copy
29 : 10

فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟

“எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் அல்லாஹ்வே சாட்சியால் போதுமானவன்; உங்கள் வழிபாட்டை விட்டும் நிச்சயம் நாங்கள் கவனமற்றவர்களாகவே இருந்தோம்” என்றும் (அந்த தெய்வங்கள் கூறும்) info
التفاسير:

external-link copy
30 : 10

هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் முன் செய்தவற்றைச் சோதிக்கும். அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும். info
التفاسير:

external-link copy
31 : 10

قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ— فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ— فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟

(நபியே!) “வானம், பூமியிலிருந்து உங்களுக்கு யார் உணவளிக்கிறார்? அல்லது (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் வெளிப்படுத்துவார்? யார் (எல்லா) காரியத்தை(யும்) நிர்வகிக்கிறான்?” என்று கூறுவீராக! அதற்கு, “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் அல்லாஹ்வை) நீங்கள் அஞ்சவேண்டாமா? என்று கூறுவீராக! info
التفاسير:

external-link copy
32 : 10

فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ— فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۚ— فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟

“அந்த அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர (வேறு) என்ன இருக்கிறது? நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?” (என்றும் கூறுவீராக). info
التفاسير:

external-link copy
33 : 10

كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

மீறியவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உண்மையாகி விட்டது. info
التفاسير: