Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
118 : 11

وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا یَزَالُوْنَ مُخْتَلِفِیْنَ ۟ۙ

உம் இறைவன் நாடியிருந்தால் மக்களை (ஒரே மார்க்கமுடைய) ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். அவர்கள் (தங்களுக்குள்) மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள். info
التفاسير:

external-link copy
119 : 11

اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ؕ— وَلِذٰلِكَ خَلَقَهُمْ ؕ— وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟

(அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் ஒரே மார்க்கத்தில் இருப்பார்கள்.) (ஒரே மார்க்கத்தில் இருந்து) இ(றை அருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள் இன்னும் மக்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறியது. info
التفاسير:

external-link copy
120 : 11

وَكُلًّا نَّقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ— وَجَآءَكَ فِیْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟

தூதர்களின் சரித்திரங்களிலிருந்து உம் உள்ளத்தை எதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை எல்லாவற்றையும் உமக்கு விவரிக்கிறோம். இவற்றில் உமக்கு உண்மையும், நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசமும் அறிவுரையும் வந்தன. info
التفاسير:

external-link copy
121 : 11

وَقُلْ لِّلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ ؕ— اِنَّا عٰمِلُوْنَ ۟ۙ

நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு கூறுவீராக! நீங்கள் உங்கள் போக்கில் (உங்களுக்கு விருப்பமான செயல்களை) செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் போக்கில் எங்கள் இறைவன் கட்டளையிட்டதை) செய்வோம். info
التفاسير:

external-link copy
122 : 11

وَانْتَظِرُوْا ۚ— اِنَّا مُنْتَظِرُوْنَ ۟

(முடிவை) எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். info
التفاسير:

external-link copy
123 : 11

وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَیْهِ یُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَیْهِ ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠

வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன! அவனிடமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும். ஆகவே, அவனை வணங்குவீராக! அவன் மீதே நம்பிக்கை வைப்பீராக! உம் இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி கண்காணிக்காதவனாக இல்லை. info
التفاسير: