Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
97 : 17

وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِیَآءَ مِنْ دُوْنِهٖ ؕ— وَنَحْشُرُهُمْ یَوْمَ الْقِیٰمَةِ عَلٰی وُجُوْهِهِمْ عُمْیًا وَّبُكْمًا وَّصُمًّا ؕ— مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِیْرًا ۟

அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்துவானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். (அல்லாஹ்) எவரை வழி கெடுப்பானோ அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர்களை நீர் அறவே காணமாட்டீர். மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை அதிகப்படுத்துவோம். info
التفاسير:

external-link copy
98 : 17

ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰیٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِیْدًا ۟

இதுதான் அவர்களின் தண்டனை. காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களை நிராகரித்தனர். “நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும், மக்கியவர்களாக (மண்ணோடு மண்ணாக) ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
99 : 17

اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَیْبَ فِیْهِ ؕ— فَاَبَی الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا ۟

நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்கள் போன்றவர்களை படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அவர்களுக்கு ஒரு தவணையை அவன் ஆக்கினான். அதில் சந்தேகமே இல்லை. அக்கிரமக்காரர்கள் (இதை) நிராகரிப்பதைத் தவிர ஏற்க மறுத்தார்கள்! info
التفاسير:

external-link copy
100 : 17

قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَآىِٕنَ رَحْمَةِ رَبِّیْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْیَةَ الْاِنْفَاقِ ؕ— وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا ۟۠

(நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால், அப்போது தர்மம் செய்வதை பயந்து (எவருக்கும் கொடுக்காது) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
101 : 17

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی تِسْعَ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ فَسْـَٔلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّیْ لَاَظُنُّكَ یٰمُوْسٰی مَسْحُوْرًا ۟

திட்டவட்டமாக, நாம் மூஸாவிற்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆகவே, (நபியே) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! அவர் (மூஸா) அவர்களிடம் வந்தபோது (நடந்தது என்ன?). ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியக்காரராக எண்ணுகிறேன்” என்று கூறினான். info
التفاسير:

external-link copy
102 : 17

قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰۤؤُلَآءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآىِٕرَ ۚ— وَاِنِّیْ لَاَظُنُّكَ یٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ۟

(மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக எண்ணுகிறேன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
103 : 17

فَاَرَادَ اَنْ یَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِیْعًا ۟ۙ

(மூஸா இன்னும் அவரை நம்பிக்கை கொண்ட) இவர்களை (ஃபிர்அவ்ன் தன்) பூமியிலிருந்து விரட்டிவிடவே நாடினான். ஆகவே, அவனையும் அவனுடன் இருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம். info
التفاسير:

external-link copy
104 : 17

وَّقُلْنَا مِنْ بَعْدِهٖ لِبَنِیْۤ اِسْرَآءِیْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِیْفًا ۟ؕ

இதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக வரவைப்போம். info
التفاسير: