Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
221 : 2

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰی یُؤْمِنَّ ؕ— وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ— وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِیْنَ حَتّٰی یُؤْمِنُوْا ؕ— وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ؕ— اُولٰٓىِٕكَ یَدْعُوْنَ اِلَی النَّارِ ۖۚ— وَاللّٰهُ یَدْعُوْۤا اِلَی الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ ۚ— وَیُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟۠

இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப் பெண் இணைவைப்பவளை விடச் சிறந்தவள், அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவர் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. அவர்கள் (இணைவைப்பவர்கள்) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ் தன் கட்டளைக் கொண்டு சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான்; மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் உபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான். info
التفاسير: