Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
259 : 2

اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ— قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ— فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ— قَالَ كَمْ لَبِثْتَ ؕ— قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ— وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫— وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ— قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்தவரைப் போன்று. (அவரை நீர் பார்த்தீரா?) "இதை அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்றார் (அவர்). அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டு(கள்) வரை மரணத்தைக் கொடுத்து பிறகு அவரை உயிர்ப்பித்து, "நீர் எத்தனை (காலம்) தங்கினீர்?" எனக் கேட்க, "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்" எனக் கூறினார். "மாறாக! நீ நூறு ஆண்டு(கள்) தங்கினாய். உன் உணவையும், உன் பானத்தையும் பார். அவை கெட்டுப் போகவில்லை. உன் கழுதையைப் பார். (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). (கழுதையின்) எலும்புகளைப் பார்; எவ்வாறு அவற்றை அசைத்து (சிலதிற்கு மேல் சிலதை) உயர்த்துகிறோம்; பிறகு அதற்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்" என்று கூறினான். அவருக்கு (இது) தெளிவானபோது, "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) அறிகிறேன்" என்று கூறினார். info
التفاسير: