Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
75 : 23

وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّلَجُّوْا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟

அவர்கள் மீது நாம் கருணை புரிந்து அவர்களுக்குள்ள தீங்கை நாம் நீக்கி விட்டால் அவர்கள் தங்களது வரம்பு மீறுவதில்தான் தடுமாறியவர்களாக பிடிவாதம் பிடித்திருப்பார்கள். info
التفاسير:

external-link copy
76 : 23

وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا یَتَضَرَّعُوْنَ ۟

அவர்களை வேதனையைக் கொண்டு திட்டவட்டமாக நாம் பிடித்தோம். அவர்கள் தங்கள் இறைவனுக்கு பணியவில்லை. இன்னும் (அவனுக்கு முன்) மன்றாடவும் இல்லை. info
التفاسير:

external-link copy
77 : 23

حَتّٰۤی اِذَا فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِیْدٍ اِذَا هُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟۠

இறுதியாக, அவர்கள் மீது கடுமையான வேதனையுடைய ஒரு கதவை நாம் திறந்தால் அப்போது அவர்கள் அதில் (அந்த வேதனையில் தங்கள் பாவத்தை நினைத்து) கவலைப்பட்டவர்களாக இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
78 : 23

وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ— قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟

அவன்தான் உங்களுக்கு செவியையும் பார்வையையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். (இருந்தாலும்) நீங்கள் குறைவாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள். info
التفاسير:

external-link copy
79 : 23

وَهُوَ الَّذِیْ ذَرَاَكُمْ فِی الْاَرْضِ وَاِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

அவன்தான் உங்களை பூமியில் படைத்தான். அவனிடம்தான் நீங்கள் (மறுமையில்) எழுப்பப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
80 : 23

وَهُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ وَلَهُ اخْتِلَافُ الَّیْلِ وَالنَّهَارِ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

அவன்தான் உயிர் கொடுக்கின்றான்; இன்னும் மரணத்தை தருகிறான். இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடையதுதான். (-அவன்தான் இரவு பகலை மாறிமாறி வரச் செய்கின்றான்.) நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
81 : 23

بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ ۟

(அவர்கள் இறை அத்தாட்சிகளை சிந்திக்கவில்லை.) மாறாக, முன்னோர்கள் கூறியது போன்றே கூறினர். info
التفاسير:

external-link copy
82 : 23

قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟

அவர்கள் கூறினர்: நாங்கள் மரணித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் எழுப்பப்படுவோமா? info
التفاسير:

external-link copy
83 : 23

لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَآؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். இது முன்னோர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை. info
التفاسير:

external-link copy
84 : 23

قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِیْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! பூமியும் அதில் உள்ளவர்களும் எவனுக்கு சொந்தம்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்!) info
التفاسير:

external-link copy
85 : 23

سَیَقُوْلُوْنَ لِلّٰهِ ؕ— قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟

அல்லாஹ்விற்கே சொந்தமானது என்றே கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? info
التفاسير:

external-link copy
86 : 23

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟

(நபியே!) கூறுவீராக! ஏழு வானங்களின் இறைவன் யார்? இன்னும் மகத்தான அர்ஷுடைய இறைவன் யார்? என்று கூறுவீராக! info
التفاسير:

external-link copy
87 : 23

سَیَقُوْلُوْنَ لِلّٰهِ ؕ— قُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟

அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் ஆட்சி) அல்லாஹ்விற்கே உரியது” நீர் கூறுவீராக! ஆகவே, நீங்கள் (அந்த அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
88 : 23

قُلْ مَنْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّهُوَ یُجِیْرُ وَلَا یُجَارُ عَلَیْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! யாருடைய கரத்தில் எல்லாவற்றின் பேராட்சி (பொக்கிஷம்) இருக்கிறது? அவன்தான் பாதுகாப்பு அளிக்கின்றான். அவனுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படாது, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்... (இதற்கு பதில் கூறுங்கள்.) info
التفاسير:

external-link copy
89 : 23

سَیَقُوْلُوْنَ لِلّٰهِ ؕ— قُلْ فَاَنّٰی تُسْحَرُوْنَ ۟

அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் பேராட்சி) அல்லாஹ்விற்கு உரியதே!” (நபியே!) நீர் கூறுவீராக! “ஆக, நீங்கள் (அந்த உண்மையை நம்பிக்கை கொள்வதிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்!” info
التفاسير: