Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
89 : 27

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ— وَهُمْ مِّنْ فَزَعٍ یَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ۟

யார் நன்மையை (லா இலாஹ இல்லல்லாஹ் வை)க் கொண்டு வருவாரோ அவருக்கு அதன் காரணமாக சிறந்தது (-சொர்க்கம் கூலியாக) உண்டு. அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள். info
التفاسير:

external-link copy
90 : 27

وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِی النَّارِ ؕ— هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

யார் தீமையைக் கொண்டு வருவாரோ (-இணைவைத்தவராக வருவாரோ) அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்து கொண்டு இருந்ததற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.) info
التفاسير:

external-link copy
91 : 27

اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَیْءٍ ؗ— وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ

(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம் இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவை. இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றியவர்களில்) நான் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன். info
التفاسير:

external-link copy
92 : 27

وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚ— فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِیْنَ ۟

இன்னும், (இந்த) குர்ஆனை நான் ஓதுவதற்கும்(கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகின்றானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன் தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)” info
التفاسير:

external-link copy
93 : 27

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَیُرِیْكُمْ اٰیٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠

(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (நபியே!) உமது இறைவன் நீங்கள் (-இணைவைப்பவர்கள்) செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும், உமக்கு வெற்றியும் உண்டு.) info
التفاسير: