Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
68 : 39

وَنُفِخَ فِی الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ— ثُمَّ نُفِخَ فِیْهِ اُخْرٰی فَاِذَا هُمْ قِیَامٌ یَّنْظُرُوْنَ ۟

சூரில் ஊதப்படும். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள். info
التفاسير:

external-link copy
69 : 39

وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِایْٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மட்டார்கள். info
التفاسير:

external-link copy
70 : 39

وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا یَفْعَلُوْنَ ۟۠

ஒவ்வோர் ஆன்மாவும் தாம் செய்தவற்றுக்கு முழுமையாக கூலி வழங்கப்படும். அவன் அவர்கள் செய்கின்ற அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
71 : 39

وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟

நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கு (-அந்த நரகத்திற்கு அருகில்) வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களுக்குக் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா? அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டது.” info
التفاسير:

external-link copy
72 : 39

قِیْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟

(அவர்களுக்கு) கூறப்படும்: நீங்கள் நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள். பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது. info
التفاسير:

external-link copy
73 : 39

وَسِیْقَ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَی الْجَنَّةِ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَیْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِیْنَ ۟

தங்கள் இறைவனை அஞ்சியவர்களை கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் நிரந்தரமானவர்களாக நுழைந்து விடுங்கள்! info
التفاسير:

external-link copy
74 : 39

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَیْثُ نَشَآءُ ۚ— فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟

அவர்கள் கூறுவார்கள்: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன்தான் தனது வாக்கை எங்களுக்கு உண்மையாக்கினான். இன்னும் இந்த (சொர்க்க) பூமியை எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். இந்த சொர்க்கத்தில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் தங்குவோம். நல்லமல் செய்வோரின் கூலி மிகச் சிறந்ததாகும். info
التفاسير: