Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
11 : 4

یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ— لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ— فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ— وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ— وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ— فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ— فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ— اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ— فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟

உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இன்றி) இரண்டிற்கும் மேலான பெண்களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (பிள்ளை) ஒருத்தியாக இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு)உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசானால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير: