Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (190) Simoore: Simoore nagge
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
2.190. அல்லாஹ்வின் பாதையை விட்டும் உங்களைத் தடுப்பதற்காக உங்களுடன் போரிடும் நிராகரிப்பாளர்களுடன் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிடுங்கள். போர்க்களத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோரைக் கொன்றோ இறந்தவர்களைச் சித்திரவதை செய்தோ வரம்புமீறிவிடாதீர்கள். அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• مشروعية الاعتكاف، وهو لزوم المسجد للعبادة؛ ولهذا يُنهى عن كل ما يعارض مقصود الاعتكاف، ومنه مباشرة المرأة.
1. இஃதிகாஃப் ஒரு வணக்கமாகும். வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாயிலில் தங்குவதற்கு இஃதிகாப் எனப்படும். எனவேதான் அதன் நோக்கத்திற்கு மாறான மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற அனைத்துவிஷயங்களும் இஃதிகாஃபில் தடுக்கப்பட்டுள்ளன.

• النهي عن أكل أموال الناس بالباطل، وتحريم كل الوسائل والأساليب التي تقود لذلك، ومنها الرشوة.
2. மனிதர்களது சொத்துக்களை அநியாயமான முறையில் உண்ணுவது தடுக்கப்பட்டதாகும். எனவேதான் இலஞ்சம் போன்ற அதற்கு இட்டுச் செல்லும் அனைத்து வழிகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.

• تحريم الاعتداء والنهي عنه؛ لأن هذا الدين قائم على العدل والإحسان.
3. வரம்புமீறுவது வன்மையாகத் தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் இந்த மார்க்கம் நீதி, உபகாரம் புரிதல் ஆகியவற்றின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

 
Firo maanaaji Aaya: (190) Simoore: Simoore nagge
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude