Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (8) Simoore: Simoore rewɓe
وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
4.8. சொத்து பங்கிடப்படும்போது அநந்தரம் பெறாத உறவினர்கள், ஏழைகள், அநாதைகள் அங்கு வந்தால், அதனைப் பங்கிட முன் மனமுவந்து அவர்களுக்கும் உபரியாக அதிலிருந்து அளியுங்கள். ஏனெனில் அவர்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். இந்தச் சொத்தும் உங்களுக்கு சிரமமின்றி கிடைத்துள்ளது. அவர்களிடம் அசிங்கமற்ற நல்லவார்த்தைகளைக் கூறுங்கள்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• دلت أحكام المواريث على أن الشريعة أعطت الرجال والنساء حقوقهم مراعية العدل بينهم وتحقيق المصلحة بينهم.
1. மார்க்கம் நீதியாகவும் நலவுகளை ஏற்படுத்தும் விதத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகளை வழங்கியுள்ளது என்பதைப் பாகப்பிரிவினை சட்டதிட்டங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

• التغليظ الشديد في حرمة أموال اليتامى، والنهي عن التعدي عليها، وعن تضييعها على أي وجه كان.
2. அநாதைகளுடைய செல்வங்களை அனுபவிப்பது கடுமையாகத் தடைசெய்யப்பட்டதாகும். அவற்றை வரம்புமீறி உண்ணுதல், எவ்விதத்திலும் அதனை வீணாக்கிவிடுவது ஆகியவையும் தடைசெய்யப்பட்டவையாகும்.

• لما كان المال من أكثر أسباب النزاع بين الناس تولى الله تعالى قسمته في أحكام المواريث.
3. பணத்தின் மூலமே மக்களுக்கு மத்தியில் அதிக பிரச்சினையை ஏற்படுத்துவதன் காரணமாகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தில் அல்லாஹ் அதனைப் பங்கிடுவதை தானே பொறுப்பேற்றுள்ளான்.

 
Firo maanaaji Aaya: (8) Simoore: Simoore rewɓe
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude