Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (91) Simoore: Simoore neemoraaɗi
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی بَشَرٍ مِّنْ شَیْءٍ ؕ— قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِیْ جَآءَ بِهٖ مُوْسٰی نُوْرًا وَّهُدًی لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِیْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِیْرًا ۚ— وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ ؕ— قُلِ اللّٰهُ ۙ— ثُمَّ ذَرْهُمْ فِیْ خَوْضِهِمْ یَلْعَبُوْنَ ۟
6.91. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அதனால்தான் அவர்கள் தங்களின் தூதர் முஹம்மதிடம் கூறினார்கள்: “அல்லாஹ் மனிதன் மீது எந்த வஹியையும் இறக்கவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மூஸாவுக்கு தவ்ராத் என்னும் வேதத்தை இறக்கியவன் யார்? அது அவருடைய சமூகத்தினருக்கு ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததே! யூதர்கள் அதனை ஏடுகளில் வைத்து அதில் தங்கள் மனஇச்சைக்கு ஒத்துப் போகக்கூடியவற்றை வெளிப்படுத்துகின்றனர். முஹம்மது நபியின் வர்ணனைகள் போன்ற தமது மனஇச்சைக்கு மாற்றமானதை மறைக்கின்றனர். அரேபியர்களே! நீங்களும் உங்கள் முன்னோர்களும் அறியாதவற்றையெல்லாம் இந்த குர்ஆனின் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டீர்கள். தூதரே! “அல்லாஹ்தான் அதனை இறக்கினான்” என்று நீர் அவர்களிடம் கூறுவீராக. பின்னர் அவர்களுக்கு மரணம் வரும்வரை அவர்களின் வழிகேட்டிலும் அறியாமையிலும் பரிகாசம்செய்தவர்களாக அவர்களை விட்டுவிடுவீராக.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• إنزال الكتب على الأنبياء هو سُنَّة الله في المرسلين، والنبي عليه الصلاة والسلام واحد منهم.
1. தூதர்களுக்கு வேதங்களை இறக்குவது தூதர்களாக அனுப்பப்பட்டோர் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நபியவர்களும் அவர்களில் ஒருவர்தாம்.

• أعظم الناس كذبًا وفرية هو الذي يكذب على الله تعالى، فينسب أو ينفي ويثبت في حق الله تعالى أمرًا ليس عليه دليل صحيح.
2. உரிய ஆதாரமின்றி அல்லாஹ்வைக் குறித்து ஒரு விடயம் இருப்பதாகவோ அல்லது இல்லையென்பதாகவோ, அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனே மனிதர்களில் மிகப் பெரும் பொய்யனும் அபாண்டம் சுமத்தியவனுமாவான்.

• كل أحد يبعث يوم القيامة فردًا متجردًا عن المناصب والألقاب، فقيرًا، ويحاسب وحده.
3. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தனித் தனியாக, பதவி, பட்டம் ஆகியவற்றை விட்டும் நீங்கியவராகவும் ஏழையாகவும் எழுப்பப்பட்டு தனியாகவே விசாரணை செய்யப்படுவார்கள்.

 
Firo maanaaji Aaya: (91) Simoore: Simoore neemoraaɗi
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude