Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Lexique des traductions


Traduction des sens Verset: (66) Sourate: AL-ISRÂ’
رَبُّكُمُ الَّذِیْ یُزْجِیْ لَكُمُ الْفُلْكَ فِی الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ ؕ— اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
17.66. -மனிதர்களே!- நீங்கள் வியாபாரத்தினால் கிடைக்கும் இலாபம் மற்றும் இன்னபிற விஷயங்களின் மூலம் இறைவனின் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அவனே கடலில் உங்களுக்காக கப்பல்களைச் ஓடச்செய்கிறான். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகுந்த கருணையாளனாக இருப்பதனால்தான் இந்த சாதனங்களையெல்லாம் உங்களுக்கு இலகுபடுத்தித் தந்துள்ளான்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• من رحمة الله بالناس عدم إنزاله الآيات التي يطلبها المكذبون حتى لا يعاجلهم بالعقاب إذا كذبوا بها.
1. பொய்பிப்பவர்கள் கோரும் சான்றுகளை இறக்காமலிருப்பது அல்லாஹ் மனிதர்கள் மேல் கொண்ட கருணையாகும். அவ்வாறு இறக்கப்பட்டு அவர்கள் அவற்றை மறுத்தால் அவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

• ابتلى الله العباد بالشيطان الداعي لهم إلى معصية الله بأقواله وأفعاله.
2. தன் சொல்லாலும் செயலாலும் பாவத்தின்பால் அழைக்கும் ஷைத்தானைக்கொண்டு அல்லாஹ் அடியார்களை சோதிக்கிறான்.

• من صور مشاركة الشيطان للإنسان في الأموال والأولاد: ترك التسمية عند الطعام والشراب والجماع، وعدم تأديب الأولاد.
3. மனிதனின் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் ஷைத்தான் பங்குபெறுவதின் சில வடிவங்கள், சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் உடலுறவுகொள்ளும் போதும் அல்லாஹ்வின் பெயரை கூறாமை, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்காமை என்பனவாகும்.

 
Traduction des sens Verset: (66) Sourate: AL-ISRÂ’
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Lexique des traductions

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fermeture