Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Lexique des traductions


Traduction des sens Verset: (240) Sourate: AL-BAQARAH
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا ۖۚ— وَّصِیَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَی الْحَوْلِ غَیْرَ اِخْرَاجٍ ۚ— فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْ مَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
2.240. உங்களில் மனைவியரை விட்டுவிட்டு மரணமடைபவர்கள், ஒருவருடம்வரை முழுமையாக அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற செலவீனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மரணசாசனம் செய்யட்டும். அந்தப் பெண்ணின் துக்கத்தைத் துடைக்குமுகமாகவும் இறந்தவரின் உயிலை நிறைவேற்றுவதற்காகவும் அவரது வாரிசுகள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடாது. அந்தப் பெண்கள் தாமாகவே வெளியேறி தங்களை அலங்கரித்துக் கொண்டால் அவர்கள்மீதோ உங்கள்மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் ஏற்படுத்திய விதிகளில், திட்டமிடலில், சட்டமியற்றுவதில் ஞானம்மிக்கவன். (குர்ஆன் விரிவுரையாளர்களில் பெரும்பாலோர் இந்த வசனத்தில் கூறப்பட்ட கட்டளை மேற்குறிப்பிட்ட 234வது வசனத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றே கருதுகிறார்கள்)
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• الحث على المحافظة على الصلاة وأدائها تامة الأركان والشروط، فإن شق عليه صلَّى على ما تيسر له من الحال.
1. தொழுகையை அதன் நிபந்தனைகளுடன் முழுமையாக நிறைவேற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நிறைவேற்றுவது கடினமாகிவிட்டால் இயன்றமுறையில் தொழுதுகொள்ள வேண்டும்.

• رحمة الله تعالى بعباده ظاهرة، فقد بين لهم آياته أتم بيان للإفادة منها.
2. அல்லாஹ் தன் அடியார்களுக்குப் புரிந்த அருட்கொடை வெளிப்படையானது. அவர்கள் தன் வசனங்களிலிருந்து பயனடைவதற்காக அவற்றை முழுமையாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.

• أن الله تعالى قد يبتلي بعض عباده فيضيِّق عليهم الرزق، ويبتلي آخرين بسعة الرزق، وله في ذلك الحكمة البالغة.
3. அல்லாஹ் தன் அடியார்கள் சிலருக்கு தாராளமாக வழங்கி சோதிக்கிறான்; சிலருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி சோதிக்கிறான். இதன் முழுமையான நோக்கத்தை அல்லாஹ்வே அறிவான்.

 
Traduction des sens Verset: (240) Sourate: AL-BAQARAH
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Lexique des traductions

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fermeture