Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Al Mâ'idah   Verset:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
5.10. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய சான்றுகளை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகளாவர். தங்களின் நிராகரிப்பிற்குத் தண்டனையாக நரகத்திற்குரிவர்களாக
ஆகிவிடுவர்.
Les exégèses en arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠
5.11. விசுவாசம் கொண்டவர்களே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். எதிரிகள் உங்களைத் தாக்க நாடியபோது உங்களுக்கு அமைதியை அளித்து உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தினை உண்டாக்கினான். உங்களை விட்டும் அவர்களைத் திருப்பி உங்களைக் காப்பாற்றினான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நம்பிக்கையாளர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
Les exégèses en arabe:
وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ— وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ— وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ— لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
5.12. பின்வரும் விடயங்களுக்காக இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதியான வாக்குறுதி வாங்கினான். அவர்களுக்கு பன்னிரண்டு தலைவர்களை ஏற்படுத்தினான். ஒவ்வொருவரும் தம் பொறுப்பிலுள்ளவர்களைக் கண்காணிப்பவர்களாக இருந்தார்கள். அவன் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினான், “நீங்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து, உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத் வழங்கி, என் தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி உண்மைப்படுத்தி, அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களுக்கு உதவியும் செய்தால் நான் உங்களுடனே இருந்து உதவியும் ஆதரவும் வழங்குவேன். மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் நிறைவேற்றினால் நீங்கள் செய்த பாவங்களை நான் மன்னித்துவிடுவேன். மறுமைநாளில் சுவனங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். உறுதிப்படுத்தப்பட்ட இந்த வாக்குறுதியை யாரேனும் மீறிவிட்டால் அவர் சத்தியப்பாதையை அறிந்துகொண்டே வேண்டுமென்றே அதிலிருந்து நெறிபிறழ்ந்து விட்டவராவார்.
Les exégèses en arabe:
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ— یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ— وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ— وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
5.13. அவர்கள் தம்மிடம் எடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியதனால் நாம் அவர்களை நம் அருளிலிருந்து தூரமாக்கி, கடின மனம் கொண்டவர்களாக ஆக்கிவிட்டோம். எனவே எந்த நன்மையான விஷயமும் அவர்களை அடையாது. அறிவுரையும் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வார்த்தைகளை மாற்றுவது மற்றும் தங்களின் மனஇச்சைக்கேற்ப தவறான பொருள் கற்பிப்பது ஆகியவற்றின் மூலம் வசனங்களை திரிக்கிறார்கள்; தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளில் சிலவற்றைச் செயல்படுத்துவதை அவர்கள் விட்டுவிட்டார்கள். தூதரே! அவர்கள் அல்லாஹ்வுக்கும் நம்பிக்கைகொண்ட அவனது அடியார்களுக்கும் மோசடி செய்வதை நீர் கண்டுகொண்டே இருக்கிறீர். ஆனாலும் அவர்களில் சிலர் தம்மிடம் எடுக்கப்பட்ட வாக்குறுதியைப் பூர்த்திசெய்தனர். நீர் அவர்களைப் புறக்கணித்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. இவ்வாறு செய்வதே நன்மையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்யக்கூடியவர்களை நேசிக்கிறான்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• من عظيم إنعام الله عز وجل على النبي عليه الصلاة والسلام وأصحابه أن حماهم وكف عنهم أيدي أهل الكفر وضررهم.
1. நிராகரிப்பாளர்களின் கரங்கள் மற்றும் தீங்கைத் தடுத்து பாதுகாப்பு வழங்கியமை தூதர் மீதும் அவருடைய தோழர்கள் மீதும் அவன் புரிந்த மகத்தான அருட்கொடைகளில் ஒன்றாகும்.

• أن الإيمان بالرسل ونصرتهم وإقامة الصلاة وإيتاء الزكاة على الوجه المطلوب، سببٌ عظيم لحصول معية الله تعالى وحدوث أسباب النصرة والتمكين والمغفرة ودخول الجنة.
2. தூதர்களை விசுவாசித்து அவர்களுக்கு உதவுவது, முறையாகத் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் வழங்குவது அல்லாஹ்வின் தோழமையையும் உதவியையும் மன்னிப்பையும் சுவனத்தையும் பெற்றுத் தரக்கூடியதாகும்.

• نقض المواثيق الملزمة بطاعة الرسل سبب لغلظة القلوب وقساوتها.
3. தூதர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவது உள்ளத்தின் இறுக்கத்திற்கும் கடினத்தன்மைக்கும் காரணமாகிவிடுகிறது.

• ذم مسالك اليهود في تحريف ما أنزل الله إليهم من كتب سماوية.
4. அல்லாஹ் தம் மீது அருளிய வேதங்களைத் திரிப்பதில் யூதர்கள் கையாண்ட வழிமுறைகள் இழித்துரைக்கப்பட்டுள்ளது.

 
Traduction des sens Sourate: Al Mâ'idah
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture