Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Al An'am   Verset:
قُلْ اَیُّ شَیْءٍ اَكْبَرُ شَهَادَةً ؕ— قُلِ اللّٰهُ ۫— شَهِیْدٌۢ بَیْنِیْ وَبَیْنَكُمْ ۫— وَاُوْحِیَ اِلَیَّ هٰذَا الْقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْ بَلَغَ ؕ— اَىِٕنَّكُمْ لَتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰی ؕ— قُلْ لَّاۤ اَشْهَدُ ۚ— قُلْ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّاِنَّنِیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۘ
6.19. தூதரே! உம்மை நிராகரித்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு யாருடைய சாட்சி மிகப் பெரியதாக இருக்கும்?” நீர் கூறுவீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு அல்லாஹ்வின் சாட்சியமே பெரியதாக இருக்கும். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாளனாக இருக்கின்றான். நான் உங்களிடம் கொண்டுவந்ததையும் நீங்கள் அதற்கு என்ன பதிலளிப்பீர்கள் என்பதையும் அவன் அறிவான். நான் உங்களை அச்சமூட்டுவதற்காக, மனிதர்கள், ஜின்கள் அனைவரையும் அச்சமூட்டுவதற்காக அல்லாஹ் எனக்கு இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளான். இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்” தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் ஏற்றுக் கொண்டது அசத்தியம் என்பதனால் அதற்கு நான் சாட்சி கூறமாட்டேன். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அனைத்தையும் விட்டும் நான் விலகிவிட்டேன்.”
Les exégèses en arabe:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ۘ— اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟۠
6.20. தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களும் தங்களின் பிள்ளைகளை மற்றவர்களின் பிள்ளையிலிருந்து பிறித்தறிவைதைப் போன்று முஹம்மது நபியை முழுமையாக அறிவார்கள். அவர்கள்தான் தங்களைத் தாங்களே நரகத்தில் நுழைத்து இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Les exégèses en arabe:
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
6.21. அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்தி அவனுடன் சேர்த்து வணங்கியவரைவிட அல்லது அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய வசனங்களை நிராகரித்தவர்களைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்தி அவனுடைய வசனங்களை மறுக்கும் அநியாயக்காரர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.
Les exégèses en arabe:
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْۤا اَیْنَ شُرَكَآؤُكُمُ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
6.22. நாம் அனைவரையும் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. யாரையும் விட்டு விட மாட்டோம். பின்னர் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் இணைத்து வணங்கியவர்களிடம் அவர்களை பரிகசிக்குமுகமாக, “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்று பொய்கூறி அவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்போம்.
Les exégèses en arabe:
ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِیْنَ ۟
6.23. இப்பரீட்சையின் பின் தாம் வணங்கிவந்த தங்களின் கடவுள்களிடமிருந்து விலகிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காது. “எங்கள் இறைவா! நாங்கள் உனக்கு யாரையும் இணையாக்கவில்லை. மாறாக நாங்கள் உன்னை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கிக் கொண்டிருந்தோம்.” என அவர்கள் பொய்யுரைப்பார்கள்.
Les exégèses en arabe:
اُنْظُرْ كَیْفَ كَذَبُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
6.24. முஹம்மதே! தாம் இணைவைக்கவில்லையென்று அவர்கள் எவ்வாறு தங்கள் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்று பாரும். இவ்வுலக வாழ்வில் அவர்கள் பொய்யாக இறைவனோடு புனைந்த இணைத் தெய்வங்கள் அவர்களை விட்டும் மறைந்து அவர்களைக் கைவிட்டுவிட்டன.
Les exégèses en arabe:
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ— وَجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْكَ یُجَادِلُوْنَكَ یَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
6.25. தூதரே! நீர் குர்ஆன் ஓதினால் இணைவைப்பாளர்களில் சிலர் உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். ஆயினும் அவர்கள் கேட்பவை அவர்களுக்கு பயனடைவதில்லை. அவர்களின் பிடிவாதம் மற்றும் புறக்கணிப்பினால் குர்ஆனை புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் காதுகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் பயனுள்ள விஷயங்களைச் செவியுற முடியாது. எவ்வளவுதான் அவர்கள் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். எந்தளவுக்கென்றால் அவர்கள் உம்மிடம் அசத்தியத்தைக்கொண்டு வாதிட வரும்போது, “முந்தைய வேதங்களிலிருந்தே நீர் இந்த விஷயங்களையெல்லாம் கொண்டுவந்தீர்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Les exégèses en arabe:
وَهُمْ یَنْهَوْنَ عَنْهُ وَیَنْـَٔوْنَ عَنْهُ ۚ— وَاِنْ یُّهْلِكُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
6.26. அவர்கள் தூதர் மீது நம்பிக்கைகொள்வதை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். தாமும் அதிலிருந்து தூரமாகிறார்கள். மக்களைப் பயனடைய விடுவதுமில்லை. அவர்கள் அதிலிருந்து பயனடைவதுமில்லை. இதன்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பது தம்மைத் தாமே அழிக்கும் வேலை என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை.
Les exégèses en arabe:
وَلَوْ تَرٰۤی اِذْ وُقِفُوْا عَلَی النَّارِ فَقَالُوْا یٰلَیْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰیٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
6.27. தூதரே! மறுமை நாளில் அவர்கள் நெருப்பில் முன்னிறுத்தப்பட்டு, “அந்தோ, அல்லாஹ்வின் வசனங்களை மறுக்காமல் அவனை நம்பிக்கைகொண்டவர்களாக ஆகுவதற்கு, நாங்கள் மீண்டும் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட மாட்டோமா!” என அவர்கள் கைசேதப்பட்டு கூறும் போது, அவர்களது அவலமான நிலை கண்டு நீர் ஆச்சரியப்படுவீர்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• بيان الحكمة في إرسال النبي عليه الصلاة والسلام بالقرآن، من أجل البلاغ والبيان، وأعظم ذلك الدعوة لتوحيد الله.
1. எடுத்துக்கூறி தெளிவுபடுத்துவதே நபியவர்கள் குர்ஆனைக் கொடுத்து அனுப்பப்பட்டதன் நோக்கம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதன் பக்கம் அழைப்பு விடுப்பதே அவற்றில் மிக முக்கியமானதாகும்.

• نفي الشريك عن الله تعالى، ودحض افتراءات المشركين في هذا الخصوص.
2. அல்லாஹ்வுக்கு இணை இல்லையென மறுத்து, இணைகள் உண்டு என்று கூறும் இணைவைப்பாளர்களின் இட்டுக்கட்டல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

• بيان معرفة اليهود والنصارى للنبي عليه الصلاة والسلام، برغم جحودهم وكفرهم.
3. யூதர்களும் கிருஸ்தவர்களும் நபியவர்களை மறுத்து நிராகரித்த போதும் நபியவர்கள் உண்மையாளர் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

 
Traduction des sens Sourate: Al An'am
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture