Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Verset: (94) Sourate: Al An'am
وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰی كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْ ۚ— وَمَا نَرٰی مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِیْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِیْكُمْ شُرَكٰٓؤُا ؕ— لَقَدْ تَّقَطَّعَ بَیْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟۠
6.94. மீண்டும் எழுப்பப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் நீங்கள் நம்மிடம் தனித்தனியாக வந்துள்ளீர்கள். பணமோ பதவியோ எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் முதலில் படைக்கப்பட்டவாறு நிர்வாணமாகவும், பாதணியின்றியும், விருத்தசேதனம் செய்யப்படாமலும் வந்துள்ளீர்கள். நாம் உங்களுக்கு வழங்கிய செல்வங்களையெல்லாம் உலகில் உங்களையும் மீறி விட்டு வந்துவிட்டீர்கள். உங்களுடைய தரகர்களாக, வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக நீங்கள் கருதிக்கொண்டிருந்த உங்களது தெய்வங்களை நாம் உங்களுடன் காணவில்லை. உங்களிடையேயுள்ள தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன. அவர்கள் பரிந்துரை செய்பவர்கள், அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் என்ற உங்களது எண்ணமும் உங்களை விட்டும் மறைந்து சென்றுவிட்டது.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• إنزال الكتب على الأنبياء هو سُنَّة الله في المرسلين، والنبي عليه الصلاة والسلام واحد منهم.
1. தூதர்களுக்கு வேதங்களை இறக்குவது தூதர்களாக அனுப்பப்பட்டோர் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நபியவர்களும் அவர்களில் ஒருவர்தாம்.

• أعظم الناس كذبًا وفرية هو الذي يكذب على الله تعالى، فينسب أو ينفي ويثبت في حق الله تعالى أمرًا ليس عليه دليل صحيح.
2. உரிய ஆதாரமின்றி அல்லாஹ்வைக் குறித்து ஒரு விடயம் இருப்பதாகவோ அல்லது இல்லையென்பதாகவோ, அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனே மனிதர்களில் மிகப் பெரும் பொய்யனும் அபாண்டம் சுமத்தியவனுமாவான்.

• كل أحد يبعث يوم القيامة فردًا متجردًا عن المناصب والألقاب، فقيرًا، ويحاسب وحده.
3. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தனித் தனியாக, பதவி, பட்டம் ஆகியவற்றை விட்டும் நீங்கியவராகவும் ஏழையாகவும் எழுப்பப்பட்டு தனியாகவே விசாரணை செய்யப்படுவார்கள்.

 
Traduction des sens Verset: (94) Sourate: Al An'am
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture