Check out the new design

Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran * - Lexique des traductions


Traduction des sens Sourate: Al A'raf   Verset:
وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ بِهِمْ ۚ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟۠
7.171. தூதரே! இஸ்ராயீலின் மக்கள் தவ்ராத்தில் உள்ளவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த போது நாம் அவர்கள் மீது மலையை உயர்த்தியதை நினைவுகூர்வீராக. அது அவர்களின் தலைக்கு மேலிருக்கும் மேகம் போல ஆகிவிட்டது. அது தங்களின் மீது விழுந்து விடும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அப்போது அவர்களிடம் கூறப்பட்டது: “நாம் உங்களுக்கு வழங்கியதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் பொருட்டு அதில் அவன் கூறிய சட்டங்களை நினைவுகூர்ந்து செயல்படுத்துங்கள். அவனை மறந்து விடாதீர்கள்.”
Les exégèses en arabe:
وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ— اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ— قَالُوْا بَلٰی ۛۚ— شَهِدْنَا ۛۚ— اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ
7.172. தூதரே! ஆதமின் மக்களின் முதுகந்தண்டுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை உம் இறைவன் வெளியாக்கியதை நினைவுகூர்வீராக. தானே படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை அவர்களின் இயல்பில் அவன் வைத்ததன் மூலம் தனது தெய்வீகத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்யுமுகமாக அவர்களிடம், “நான் உங்கள் இறைவன் இல்லையா?” என்று கேட்டான். அவர்கள் அனைவரும், ”ஆம். நிச்சயமாக நீதான் எங்களின் இறைவன்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்களுக்கெதிரான அல்லாஹ்வின் ஆதாரத்தை நீங்கள் மறுத்து, மறுமை நாளில் ‘இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக நாம் உங்களை சோதித்து உங்களிடம் வாக்குறுதி வாங்கிவிட்டோம்.”
Les exégèses en arabe:
اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّیَّةً مِّنْ بَعْدِهِمْ ۚ— اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ۟
7.173. அல்லது உங்களின் முன்னோர்களே வாக்குறுதியை மீறி அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்கள். நீங்கள் வெறுமனே இணைவைப்பில் உங்கள் முன்னோர்களைப் பின்பற்றக்கூடியவர்களாகவே இருந்தீர்கள் என நீங்கள் வாதிட்டு, எங்கள் இறைவா! தங்களின் இணைவைப்பின் மூலம் தங்களின் செயல்களை வீணாக்கிய எமது முன்னோர்களின் செயலுக்காக எங்களை குற்றம்பிடித்து தண்டிக்கலாமா? எங்கள் அறியாமை, நமது முன்னோர்களைப் பின்பற்றியதனால் நம் மீது எக்குற்றமும் இல்லை, என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவும்தான்.
Les exégèses en arabe:
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
7.174. முன்னர் நிராகரித்த சமூகங்களின் இருப்பிடம் தொடர்பாக வசனங்களைத் தெளிவுபடுத்தியது போன்று இவர்கள் இணைவைப்பிலிருந்து நீங்கி அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக இவர்களுக்கும் அவற்றைத் தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறுதான் தாமாகவே அவர்கள் அல்லாஹ்வுக்கு வழங்கிய உறுதிமொழியில் இடம்பெற்றுள்ளது.
Les exégèses en arabe:
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ الَّذِیْۤ اٰتَیْنٰهُ اٰیٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّیْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِیْنَ ۟
7.175. தூதரே! இஸ்ராயீலின் மக்களுக்கு அவர்களில் ஒரு மனிதனின் செய்தியை எடுத்துரைப்பீராக. நாம் அவனுக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். அவன் அவற்றை அறிந்து அது குறிப்பிடும் சத்தியத்தை அறிந்து கொண்டான். ஆனால் அதன்படி செயல்படாமல் அதிலிருந்து வெளியேறிவிட்டான். ஷைத்தான் அவனுடன் சேர்ந்து அவனுடைய தோழனாகிவிட்டான். நேர்வழிபெற்ற பிறகு அவன் அழியக்கூடிய வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
Les exégèses en arabe:
وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ— فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ— اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ— ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
7.176. இந்த வசனங்களின் மூலம் நாம் அவனுக்குப் பயனளிக்க நாடியிருந்தால் அவனுக்கு நற்செயல் புரியும் வாய்ப்பை வழங்கி இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுடைய அந்தஸ்தை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் தனது மறுமையை விட இம்மைக்கு முன்னுரிமை வழங்கி தன் மனம் விரும்பும் அசத்தியத்தைப் பின்பற்றி இவ்வுலக இன்பங்களின்பால் சாய்ந்து தனது தோல்விக்கு வழிவகுப்பவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். உலக இன்பங்களின் மீது அவன் கொண்ட பேராசைக்கு உதாரணம் நாயைப் போன்றது. அது எல்லா நிலைகளிலும் மூச்சிறைத்துக் கொண்டே இருக்கும். அமர்ந்து இருந்தாலும் மூச்சிறைக்கும். விரட்டப்பட்டாலும் மூச்சிறைக்கும். மேற்கூறப்பட்ட உதாரணம் நம் சான்றுகளை நிராகரிக்கும் வழிகெட்ட மக்களுக்குரிய உதாரணமாகும் . தூதரே! அவர்கள் சிந்தித்து நிராகரிப்பிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் விலகுவதற்காக அவர்களுக்கு சம்பவங்களை எடுத்துரைப்பீராக.
Les exégèses en arabe:
سَآءَ مَثَلَا ١لْقَوْمُ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا یَظْلِمُوْنَ ۟
7.177. நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் நம்பாமல் நிராகரித்தவர்களைவிட தீய மக்கள் வேறு யாரும் இல்லை. அதன் மூலம் அவர்கள் தம்மை அழிவில் போட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
Les exégèses en arabe:
مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِیْ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
7.178. அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழிபெற்றவராவார். அல்லாஹ் யாருக்கு வழிகாட்டாமல் கைவிட்டுவிடுகிறானோ, உறுதியாக அவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாவர். அறிந்துகொள்ளுங்கள், இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• المقصود من إنزال الكتب السماوية العمل بمقتضاها لا تلاوتها باللسان وترتيلها فقط، فإن ذلك نَبْذ لها.
1. வான வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம் அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். வெறுமனே இராகமாக ஓதுவதற்காக அல்ல. அதன்படி செயல்படாமல் வெறுமனே இராகமாக ஓதுவது அதனைப் புறக்கணிப்பதாகும்.

• أن الله خلق في الإنسان من وقت تكوينه إدراك أدلة الوحدانية، فإذا كانت فطرته سليمة، ولم يدخل عليها ما يفسدها أدرك هذه الأدلة، وعمل بمقتضاها.
2. அல்லாஹ் மனிதனைப் படைத்த போதே அவனுடைய இயல்பில் அல்லாஹ் ஒருவனே என்பதற்கான ஆதாரங்களபை் புரிந்துகொள்ளும் ஆற்றலை வைத்துவிட்டான். அவனது இயல்பை சிதைக்கும் காரணிகளால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் வரை அவ்வாதாரங்களைப் புரிந்து அதன்படி செயற்படுவான்.

• في الآيات عبرة للموفَّقين للعمل بآيات القرآن؛ ليعلموا فضل الله عليهم في توفيقهم للعمل بها؛ لتزكو نفوسهم.
3. தங்களின் ஆன்மாக்கள் பரிசுத்தமடைவதற்காக அல்குர்ஆனின் வசனங்களின் படி செயற்பட அவர்களுக்கு வாய்ப்பளித்து அல்லாஹ் அவர்கள் மீது புரிந்த அருளை அவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, குர்ஆனுடைய வசனங்களின்படி செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு இவ்வசனங்களிலே படிப்பினை இருக்கின்றது.

• في الآيات تلقين للمسلمين للتوجه إلى الله تعالى بطلب الهداية منه والعصمة من مزالق الضلال.
4.அல்லாஹ்விடமே நேர்வழியையும் வழிகேடுகளில் இருந்து பாதுகாப்பையும் வேண்டுவதன் மூலம் அல்லாஹ்வின் பக்கமே முஸ்லிம்கள் திரும்ப வேண்டும் என்ற பாடத்தை மேற்கூறிய வசனங்கள் முஸ்லிம்களுக்குப் போதிக்கின்றன.

 
Traduction des sens Sourate: Al A'raf
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran - Lexique des traductions

Émanant du Centre d'Exégèse pour les Études Coraniques.

Fermeture