Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ * - ભાષાંતરોની અનુક્રમણિકા

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ અઅરાફ   આયત:
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
“இன்னும், ‘ஆது’ க்குப் பின்னர் உங்களை பிரதிநிதிகளாக்கி, பூமியில் உங்களை தங்க வைத்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் அதன் சமவெளிகளில் மாளிகைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், மலைகளில் வீடுகளை குடைந்து கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; இன்னும், விஷமிகளாக (மக்களுக்கு கெடுதி செய்பவர்களாக) பூமியில் அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்.”
અરબી તફસીરો:
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த முக்கிய பிரமுகர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” (நம்பிக்கை கொண்டவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள் ஆவோம்.”
અરબી તફસીરો:
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
பெருமையடித்தவர்கள் கூறினார்கள்: “நீங்கள் நம்பிக்கை கொண்டதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்.”
અરબી તફસીરો:
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
ஆக, (அந்தப்) பெண் ஒட்டகத்தை அறுத்தனர். இன்னும், தங்கள் இறைவனின் கட்டளையை மீறினர். இன்னும், “ஸாலிஹே! நீர் (இறைவனுடைய) தூதர்களில் (ஒருவராக) இருந்தால் நீர் எங்களை அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வருவீராக!” என்று கூறினர்.
અરબી તફસીરો:
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
ஆகவே பயங்கர சப்தம் அவர்களைப் பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்.
અરબી તફસીરો:
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
பிறகு, (ஸாலிஹ் நபி) அவர்களை விட்டு திரும்பினார். இன்னும், கூறினார்: “என் சமுதாயமே! நான் உங்களுக்கு என் இறைவனின் தூதை திட்டவட்டமாக எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். எனினும் உபதேசிப்பவர்களை நீங்கள் விரும்புவதில்லை.”
અરબી તફસીરો:
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
இன்னும், ‘லூத்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் தம் சமுதாயத்தை நோக்கி, “மானக்கேடானதை செய்கிறீர்களா? உலகத்தாரில் ஒருவருமே இதில் உங்களை முந்தவில்லை. (உலகில் எவரும் இதற்கு முன் செய்யாத மானக்கேடான செயலை செய்கிறீர்களா?)” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
અરબી તફસીરો:
اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
“நிச்சயமாக நீங்கள் பெண்கள் அன்றி ஆண்களிடம் காமத்தை நிறைவேற்ற வருகிறீர்கள். மாறாக, நீங்கள் (பாவத்தில்) எல்லை மீறிய மக்கள்” என்று கூறினார்.
અરબી તફસીરો:
 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ અઅરાફ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તેનું અનુવાદ શૈખ ઉમર શરીફ બિન્ અબ્દુસ્ સલામ દ્વારા કરવામાં આવ્યું છે.

બંધ કરો