Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ * - ભાષાંતરોની અનુક્રમણિકા

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ અઅરાફ   આયત:
قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ— كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ— حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ— قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬— قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟
“ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (பாவிகளான) கூட்டங்களில் (இணைந்து நீங்களும்) நரகத்தில் நுழையுங்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான். ஒரு கூட்டம் (நரகத்தில்) நுழையும்போதெல்லாம் அது, தன் சக கூட்டத்தை சபிக்கும். இறுதியாக, அதில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களில் பின் வந்த கூட்டம் தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து, “எங்கள் இறைவா! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தனர். எனவே, அவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு தண்டனையைக் கொடு!” என்று கூறும். “(உங்களில்) எல்லோருக்குமே இருமடங்கு (தண்டனை) உண்டு. எனினும், (மற்றவர்களுடைய தண்டனையின் வலியை) நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
અરબી તફસીરો:
وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠
இன்னும், அவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “(நாங்கள் நம்பிக்கை கொள்ளாதது போன்றே நீங்களும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் பற்றிய செய்திகள் உங்களுக்கு சொல்லப்பட்டும் நீங்கள் படிப்பினை பெறவில்லை.) ஆகவே, “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை.” (அப்போது, அல்லாஹ் - அவர்கள் எல்லோரையும் நோக்கி - கூறுவான்:) ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக (எனது) தண்டனையைச் சுவையுங்கள்.”
અરબી તફસીરો:
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ; இன்னும், அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தார்களோ அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இன்னும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலிகொடுப்போம்.
અરબી તફસીરો:
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
நரகத்தில் அவர்களுக்கு (கீழே நெருப்பினால் ஆன) விரிப்பும், அவர்களுக்கு மேலே (நெருப்பினால் ஆன) போர்வைகளும் உண்டு. இன்னும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலிகொடுப்போம்.
અરબી તફસીરો:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
ஓர் ஆன்மாவை அதன் சக்திக்குத் தக்கவாறே தவிர (அதன் மீது சட்டங்களை சுமத்தி) சிரமப்படுத்த மாட்டோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
અરબી તફસીરો:
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ— وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫— وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ— لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ— وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
இன்னும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். “இவற்றை அடைய எங்களுக்கு நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. இன்னும், அல்லாஹ் எங்களை நேர்வழி நடத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டுவந்தார்கள்” என்று (அவர்கள்) கூறுவார்கள். இன்னும், “நீங்கள் செய்து கொண்டிருந்த அமல்களுக்கு பகரமாக நீங்கள் வாரிசுகளாக ஆக்கப்பட்ட சொர்க்கம் இதுதான்” என்று (நற்செய்தி கூறப்பட்டு அவர்கள்) அழைக்கப்படுவார்கள்.
અરબી તફસીરો:
 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ અઅરાફ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - ઉમર શરીફ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તેનું અનુવાદ શૈખ ઉમર શરીફ બિન્ અબ્દુસ્ સલામ દ્વારા કરવામાં આવ્યું છે.

બંધ કરો