Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Alhajj   Aya:
یٰۤاَیُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ— اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ یَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ؕ— وَاِنْ یَّسْلُبْهُمُ الذُّبَابُ شَیْـًٔا لَّا یَسْتَنْقِذُوْهُ مِنْهُ ؕ— ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ ۟
22.73. மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதை செவிசாய்த்துக் கேளுங்கள். அதைக்கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கக்கூடிய சிலைகளும் மற்றவைகளும் ஒரு சிறிய ஈயைக்கூட ஒருபோதும் படைக்க முடியாது. அந்த ஈயைப் படைப்பதற்கு அவையனைத்தும் ஒன்றுதிரண்டாலும் அவற்றால் அதனைப் படைக்க முடியாது. அந்த சிலைகளின் மீதிருக்கும் வாசனை திரவியம், அல்லது அது போன்ற ஏதேனும் ஒன்றை ஒரு ஈ பறித்துக் கொண்டாலும் அதனைக்கூட அவற்றால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கவும் அது எடுத்துச் செல்பவற்றைப் பாதுகாக்கவும் இயலாமல் இருக்கும் போது அதனை விட பெரிய விடயங்களை அவற்றால் செய்ய முடியாது என்பது தெள்ளத் தெளிவு. அல்லாஹ்வை விடுத்து இந்த அளவு இயலாமையில் இருக்கின்ற அவற்றை ஏன் வணங்குகிறீர்கள்? ஈ எடுத்துச் செல்பவற்றைக் காத்துக்கொள்ள முடியாத தேடக்கூடிய வணங்கப்படும் இந்தச் சிலையும் பலவீனமானது. தேடப்படும் இந்த ஈயும் பலவீனமானது.
Tafsiran larabci:
مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ؕ— اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
22.74. அவர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. எனவேதான் அவனுடன் இணைத்து அவனுடைய சில படைப்புகளையும் வணங்கினார்கள். நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையவன். அவனுடைய சக்தி, வல்லமையின் மூலமே, அவன் வானங்களையும் பூமியையும் அவற்றிலுள்ளதையும் படைத்துள்ளான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. இணைவைப்பாளர்கள் வணங்கும் சிலைகளோ பலவீனமானவையாக எதையும் படைக்காத இழிவானவையாக இருக்கின்றன.
Tafsiran larabci:
اَللّٰهُ یَصْطَفِیْ مِنَ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟ۚ
22.75. அல்லாஹ் வானவர்களிலிருந்தும் அவ்வாறே மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஜிப்ரீல் போன்ற சில வானவர்களை மனித இனத்திலுள்ள நபிமார்கள், இறைத்தூதர்களிடம் தூதர்களாக அனுப்புகிறான். மனித இனத்திலுள்ள இறைத்தூதர்களை மனிதர்களுக்குத் தூதர்களாக அனுப்புகிறான். நிச்சயமாக இணைவைப்பாளர்கள் தன் தூதர்களைக்குறித்துக் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன். தன் தூதுப்பணிக்காக தேர்ந்தெடுக்கக்கூடியவர்களை அவன் பார்க்கக்கூடியவன்.
Tafsiran larabci:
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
22.76. அவன் வானவர்களிலும் மனிதர்களிலும் உள்ள தன் தூதர்களை அவர்களைப் படைப்பதற்கு முன்னரும் அவர்கள் இறந்தபின்னரும் அறியக்கூடியவன். மறுமைநாளில் விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன. அந்நாளில் அவன் தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்கள் செய்த செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَیْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
22.77. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனது மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ் ஒருவனுக்காக உங்களின் தொழுகையில் ருகூவு செய்து சிரம்பணியுங்கள், தர்மம், உறவுகளைப் பேணுதல் போன்ற இன்னோரன்ன நன்மையான செயல்களைச் செய்யுங்கள். அதனால் நீங்கள் வெறுப்பதில் (நரகம்) இருந்து பாதுகாப்பு பெற்று, வேண்டியதை (சுவனம்) பெற்று வெற்றியடைவீர்கள்.
Tafsiran larabci:
وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ— هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ— مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ— هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬— مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ— فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ— هُوَ مَوْلٰىكُمْ ۚ— فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠
22.78. அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய திருப்தியை நாடி ஜிஹாது செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களின் மார்க்கத்தை சிரமங்களோ, கடினங்களோ அற்ற இலகுவான மார்க்கமாக ஆக்கியுள்ளான். இந்த இலகுவான மார்க்கமே உங்களின் தந்தை இப்ராஹீமின் மார்க்கமாகும். அல்லாஹ் முந்தைய வேதங்களிலும் குர்ஆனிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டுள்ளான். நிச்சயமாக தூதர் தனக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று தூதர் உங்கள் மீது சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் முந்தைய சமூகங்களின் மீது அவர்களின் தூதர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே நீங்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி, அல்லாஹ்வின் பக்கம் தஞ்சமடைந்து உங்களின் விவகாரங்களில் அவனையே சார்ந்திருங்கள். அவனை நேசிக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அவனே மிகச் சிறந்த பாதுகாவலனாகவும் தன்னிடம் உதவிதேடக்கூடியவர்களுக்கு மிகச்சிறந்த உதவியாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனையே பாதுகாவலனாக ஆக்கிக்கொள்ளுங்கள் அவன் உங்களை பாதுகாப்பான். அவனிடமே உதவிதேடுங்கள் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• أهمية ضرب الأمثال لتوضيح المعاني، وهي طريقة تربوية جليلة.
1. விஷயங்களைப் புரியவைப்பதற்காக உதாரணங்கள் கூறுவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. அது மிகச்சிறந்த பயிற்றுவிக்கும் வழிமுறையாகும்.

• عجز الأصنام عن خلق الأدنى دليل على عجزها عن خلق غيره.
2. சிறு படைப்பைக்கூட சிலைகளால் படைக்க முடியாமை ஏனையவற்றை அவற்றால் படைக்க முடியாது என்பதற்கான ஆதாரமாகும்.

• الإشراك بالله سببه عدم تعظيم الله.
3. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் காரணம் அவனைக் கண்ணியப்படுத்தாமையே.

• إثبات صفتي القوة والعزة لله، وأهمية أن يستحضر المؤمن معاني هذه الصفات.
4. சக்தி, கண்ணியம் என்ற இரு பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பது நிரூபனமாகிறது. நம்பிக்கையாளன் இந்த பண்புகளின் அர்த்தங்களை விளங்கிக் கொள்வது முக்கியமாகும்.

 
Fassarar Ma'anoni Sura: Alhajj
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa