Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Alhajj   Aya:
اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ— یَحْكُمُ بَیْنَهُمْ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
22.56. -அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களை வந்தடையும் அந்த மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அங்கு அதில் அவனோடு சர்ச்சைப்படுபவர்கள் யாரும் இல்லை. அவன் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அளிப்பான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான பாக்கிய மிக்க சுவனங்கள் எனும் மகத்தான கூலி உண்டு.
Tafsiran larabci:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا فَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
22.57. அல்லாஹ்வை நிராகரித்து தூதர் மீது இறக்கப்பட்ட அவனுடைய வசனங்களை பொய் எனக் கூறுபவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு. நரகத்தில் அந்த வேதனையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்.
Tafsiran larabci:
وَالَّذِیْنَ هَاجَرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْۤا اَوْ مَاتُوْا لَیَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًا ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
22.58. அல்லாஹ்வின் திருப்தியையும் மார்க்கத்தின் கண்ணியத்தையும் நாடி தங்களின் நாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்து பின்னர் அவனுடைய பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் என்றும் முடிவுறாத அழகிய வாழ்வாதாரத்தை அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்போரில் அவனே மிகச் சிறந்தவன்.
Tafsiran larabci:
لَیُدْخِلَنَّهُمْ مُّدْخَلًا یَّرْضَوْنَهٗ ؕ— وَاِنَّ اللّٰهَ لَعَلِیْمٌ حَلِیْمٌ ۟
22.59. அவர்கள் திருப்தியடையும் சுவனம் என்னும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் அவர்களின் விஷயத்தில் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவர்களின் தவறுக்காக அவன் அவர்களை உடனுக்குடன் தண்டிக்கவில்லை.
Tafsiran larabci:
ذٰلِكَ ۚ— وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِیَ عَلَیْهِ لَیَنْصُرَنَّهُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟
22.60. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வது, அநியாயம் இழைத்தவர்களை அவர்கள் அநியாயம் இழைத்த அளவுக்கு பழிவாங்குவதற்கு அனுமதியளித்தது, அவ்வாறு செய்வது குற்றமாகாது ஆகிய மேற்கூறப்பட்டவைகள் அநியாயம் இழைத்தவன் மீண்டும் வரம்புமீறினால் நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவிசெய்யக்கூடியவன். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாவங்களை விட்டுவிடக்கூடியவனாகவும் அவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
Tafsiran larabci:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
22.61. அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு அல்லாஹ் இவ்வாறு உதவிசெய்வது ஏனெனில் நிச்சயமாக அவன் தான் நாடியதைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் என்பதனாலாகும். அவனுடைய ஆற்றலில் உள்ளதே, இரவையும் பகலையும் ஒன்றைக் கூட்டியும் ஒன்றைக் குறைத்தும் ஒன்றில் ஒன்றை நுழையச் செய்வதாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟
22.62. அல்லாஹ் இரவைப் பகலில் நுழையச் செய்வதும் பகலை இரவில் நுழையச் செய்வதும் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், அவனுடைய மார்க்கமும், அவன் அளித்த வாக்குறுதியும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்வதும் உண்மையானது, அல்லாஹ்வை தவிர இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் அடிப்படையற்ற அசத்தியமாகும் என்பதினாலேயாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளை விட உள்ளமையாலும் மதிப்பாலும் ஆதிக்கத்தாலும் மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன். பெருமையும் கண்ணியமும் மகத்துவமும் அவனுக்கே உரியது.
Tafsiran larabci:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؗ— فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ؕ— اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟ۚ
22.63. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்குகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மழை பெய்த பிறகு பூமி அதில் முளைக்கும் தாவரங்களால் பசுமையாகிவிடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுடன் மென்மையாளனாக உள்ளான். அதனால் தான் அவர்களுக்கு மழையைப் பொழிந்து பூமியைப் பசுமையாக்கினான். அவர்களின் நலன்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Tafsiran larabci:
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠
22.64. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அவனுக்கே உரியது. நிச்சயமாக அவன் எல்லா விதமான படைப்புகளை விட்டும் தேவையற்றவனாகவும் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• مكانة الهجرة في الإسلام وبيان فضلها.
1. இஸ்லாத்தில் புலம்பெயர்தலின் சிறப்பும் அந்தஸ்தும் தெளிவாகிறது.

• جواز العقاب بالمثل.
2. துன்புறுத்தப்பட்ட அளவே தண்டிக்க அனுமதியுள்ளது.

• نصر الله للمُعْتَدَى عليه يكون في الدنيا أو الآخرة.
3. அநீதி இழைக்கப்பட்டவனுக்கு இவ்வுலகிலோ மறுவுலகிலோ அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

• إثبات الصفات العُلَا لله بما يليق بجلاله؛ كالعلم والسمع والبصر والعلو.
4. அறிவு, கேட்டல், பார்த்தல், உயர்வு போன்ற அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்ப உயர்வான பண்புகள் அவனுக்கு இருக்கின்றன என்று உறுதிப்படுத்தல்.

 
Fassarar Ma'anoni Sura: Alhajj
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa