Check out the new design

क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - अब्दुल हमीद बाक़वी * - अनुवादों की सूची

XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थों का अनुवाद सूरा: अल्-अह़्क़ाफ़   आयत:
وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِیْنَ ۟
6. தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவை) நிராகரித்துவிடும்.
अरबी तफ़सीरें:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ— هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ؕ
7. நம் தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவற்றைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்.
अरबी तफ़सीरें:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِیْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— هُوَ اَعْلَمُ بِمَا تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— كَفٰی بِهٖ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
8. (நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِیْ مَا یُفْعَلُ بِیْ وَلَا بِكُمْ ؕ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
9. (நபியே! அவர்களை நோக்கி, மேலும்) கூறுவீராக: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) மேலும், என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹ்யி மூலமாக அறிவிக்கப்பட்டவற்றை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.
अरबी तफ़सीरें:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
10. (நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
अरबी तफ़सीरें:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَیْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَیْهِ ؕ— وَاِذْ لَمْ یَهْتَدُوْا بِهٖ فَسَیَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِیْمٌ ۟
11. நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதை நம்பிக்கைகொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்தியிருக்க மாட்டார்கள். (இதில் ஒரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்)'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்.
अरबी तफ़सीरें:
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟
12. இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது.
अरबी तफ़सीरें:
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
13. எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
अरबी तफ़सीरें:
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
14. இவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கிவிடுவார்கள்.
अरबी तफ़सीरें:
 
अर्थों का अनुवाद सूरा: अल्-अह़्क़ाफ़
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - अब्दुल हमीद बाक़वी - अनुवादों की सूची

अनुवाद शैख़ अब्दुल हमीद बाक़वी ने किया है।

बंद करें