क़ुरआन के अर्थों का अनुवाद - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - अनुवादों की सूची


अर्थों का अनुवाद सूरा: सूरा अल्-फ़ातिह़ा   आयत:

ஸூரா அல்பாதிஹா

सूरा के उद्देश्य:
تحقيق العبودية الخالصة لله تعالى.
மனத்தூய்மை மிக்க அல்லாஹ்வுக்கான அடிமைத்துவத்தை நிரூபித்தல்

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
1.1. அல்லாஹ்விடம் உதவிதேடியவராகவும் அவனது பெயரைக் கூறுவதன் மூலம் அருள்வளத்தை எதிர்பார்த்தவராகவும் குர்ஆன் ஓதுவதை ஆரம்பம் செய்கிறேன். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் அல்லாஹ்வின் மூன்று அழகிய பெயர்களை உள்ளடக்கியுள்ளது. 1. அல்லாஹ்: வணங்கப்படுவதற்கு உண்மையில் தகுதியானவன். இது வேறு யாருக்கும் சூட்டப்பட முடியாத, அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமான பெயராகும். 2. அர்ரஹ்மான்: அளவற்ற அன்பாளன். 3. அர்ரஹீம்: தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அன்பு காட்டுபவன். குறிப்பாக, தனது அடியார்களில் அவனையே வணங்கி வாழும் விசுவாசிகளுக்கு அன்பு காட்டுபவன்.
अरबी तफ़सीरें:
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
1.2. முழுமையான புகழும், பெருமை மற்றும் பரிபூரணம் என்ற அனைத்து விதமான புகழ்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே. ஏனெனில், அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்தவன்;அவற்றைப் பராமரிப்பவன், நிர்வகிப்பவன், ஆலமீன் எனப்படும் அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்துக்கும் இரட்சகன்.
अरबी तफ़सीरें:
الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
முந்திய வசனத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் மீண்டும் அவனைப் புகழப்பட்டுள்ளது.
अरबी तफ़सीरें:
مٰلِكِ یَوْمِ الدِّیْنِ ۟ؕ
1.4.கூலி வழங்கப்படும், கணக்குகள் தீர்க்கப்படும் யவ்முத்தீன் என்ற மறுமை நாளில் நடைபெற உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே என்று அல்லாஹ்வைப் புகழ்வோம். அந்த நாளில் எந்த ஆத்மாவும் இன்னொருவருக்கு எதுவும் செய்ய முடியாது.
अरबी तफ़सीरें:
اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُ ۟ؕ
1.5. அனைத்து வகையான வணக்கங்களையும் கீழ்ப்படிதலையும் உனக்கு மாத்திரமே நிறைவேற்றுவோம். உனக்கு இணையாக யாரையும் ஆக்கமாட்டோம்.எங்களுடைய எல்லா விஷயங்களிலும் உன்னிடம் மாத்திரமே நாங்கள் உதவி தேடுகிறோம்.உன் கைவசமே நன்மைகள் அனைத்தும் உள்ளன. உன்னைத்தவிர வேறு உதவியாளன் இல்லை.
अरबी तफ़सीरें:
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
1.6.நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டி அதிலேயே எங்களைச் செலுத்துவாயாக. மேலும், அதில் எங்களை உறுதிப்படுத்தி நேர்வழியில் செல்வதை இன்னும் அதிகரிப்பாயாக. கோணல் இல்லாத தெளிவான பாதையே நேரான பாதை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டுவந்த இஸ்லாம்தான் அந்த நேரான பாதை.
अरबी तफ़सीरें:
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ ۙ۬— غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ ۟۠
1.7 அந்த நேர்வழி உன் அடியார்களில் நீ வழிகாட்டி அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்கள் ஆகியோர் சென்ற வழி. அவர்களே சிறந்த தோழர்கள். சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றாமல் உன்னுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழி அல்ல அது; சத்தியத்தை தேடுவதிலும் அதனை அடைவதிலும் அலட்சியமாக இருந்ததால் அதனை விட்டு வழிதவறிய கிறித்தவர்களின் வழியுமல்ல அது.
अरबी तफ़सीरें:
इस पृष्ठ की आयतों से प्राप्त कुछ बिंदु:
• افتتح الله تعالى كتابه بالبسملة؛ ليرشد عباده أن يبدؤوا أعمالهم وأقوالهم بها طلبًا لعونه وتوفيقه.
1. அடியார்கள் தங்களின் செயல்களையும் பேச்சுகளையும் அல்லாஹ்வின் பெயர் கூறி அவனிடம் உதவிதேடிய நிலையில் தொடங்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அவன் தனது வேதத்தை"பிஸ்மில்லாஹ்"என்று தொடங்குகிறான்.

• من هدي عباد الله الصالحين في الدعاء البدء بتمجيد الله والثناء عليه سبحانه، ثم الشروع في الطلب.
2. பிரார்த்தனையில் முதன்மையாக அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பிறகு தம் வேண்டுதலை முன்வைப்பது அல்லாஹ்வுடைய நல்லடியார்களின் வழிமுறையாகும்.

• تحذير المسلمين من التقصير في طلب الحق كالنصارى الضالين، أو عدم العمل بالحق الذي عرفوه كاليهود المغضوب عليهم.
3. கிறித்தவர்களைப் போன்று சத்தியத்தைத் தேடுவதில் அலட்சியமாக இருந்து வழிகெட்டுப்போவதோ, அல்லது யூதர்களைப் போன்று அறிந்துகொண்ட சத்தியத்தைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகுவதோ கூடாது என்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

• دلَّت السورة على أن كمال الإيمان يكون بإخلاص العبادة لله تعالى وطلب العون منه وحده دون سواه.
4. வணக்க வழிபாட்டை மனத்தூய்மையோடு அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணித்தல், வேறு யாரிடமும் இல்லாமல் அவனிடம் மட்டுமே உதவிதேடுதல் ஆகியவை மூலமே ஈமான் பரிபூரணமடைகிறது என்பதையும் இந்த அத்தியாயம் உணர்த்துகிறது.

 
अर्थों का अनुवाद सूरा: सूरा अल्-फ़ातिह़ा
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - अनुवादों की सूची

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

बंद करें