Check out the new design

क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल में पवित्र क़ुरआन की संक्षिप्त व्याख्या का अनुवाद * - अनुवादों की सूची


अर्थों का अनुवाद सूरा: अल्-कह्फ़   आयत:
اَلْمَالُ وَالْبَنُوْنَ زِیْنَةُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ اَمَلًا ۟
18.46. செல்வமும் பிள்ளைகளும் உலக வாழ்வின் அலங்காரங்கள்தாம். அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவழித்தாலே அன்றி மறுமையில் செல்வத்தால் எந்தப் பயனும் இல்லை. நல்ல வார்த்தைகளும், செயல்களுமே அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுத்தருவதில் இந்த உலகிலுள்ள அனைத்து அலங்காரங்களையும் விடச் சிறந்ததாகும். அதுவே மனிதன் எதிர்பார்ப்பவற்றில் மிகச் சிறந்ததாகும். ஏனெனில் உலக அலங்காரங்கள் அழிந்துவிடக்கூடியவையே. அல்லாஹ்வுக்குப் பிடித்தமான சொற்கள் மற்றும் செயல்களின் கூலியே நிலைத்திருக்கக்கூடியவை.
अरबी तफ़सीरें:
وَیَوْمَ نُسَیِّرُ الْجِبَالَ وَتَرَی الْاَرْضَ بَارِزَةً ۙ— وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًا ۟ۚ
18.47. நாம் மலைகளை அதன் இடங்களிலிருந்து அகற்றிவிடும் நாளை நினைவு கூறுவீராக! பூமியிலுள்ள மலைகள், மரங்கள், கட்டிடங்கள் அனைத்தும் அழிந்துவிடுவதனால் அதனை வெட்ட வெளியாக நீர் காண்பீர். நாம் படைப்புகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டுவோம். அவர்களில் எவரையும் எழுப்பாமல் விட்டுவிட மாட்டோம்.
अरबी तफ़सीरें:
وَعُرِضُوْا عَلٰی رَبِّكَ صَفًّا ؕ— لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ ؗ— بَلْ زَعَمْتُمْ اَلَّنْ نَّجْعَلَ لَكُمْ مَّوْعِدًا ۟
18.48. மனிதர்கள் விசாரணைக்காக உம் இறைவனுக்கு முன்னால் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “நாம் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே தனித்தனியாக செருப்புகளின்றி, நிர்வாணமாக விருத்தசேதனம் செய்யப்படாதோராக நம்மிடம் வந்துவிட்டீர்கள். மாறாக நாம் உங்களை மீண்டும் எழுப்ப மாட்டோம் என்றும் நாம் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக ஒரு இடத்தையும் காலத்தையும் ஏற்படுத்தமாட்டோம் என்றும் நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.
अरबी तफ़सीरें:
وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَی الْمُجْرِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا فِیْهِ وَیَقُوْلُوْنَ یٰوَیْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا یُغَادِرُ صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً اِلَّاۤ اَحْصٰىهَا ۚ— وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا ؕ— وَلَا یَظْلِمُ رَبُّكَ اَحَدًا ۟۠
18.49. அவர்களுக்கு முன்னால் செயல்பதிவேடு வைக்கப்படும். அவர்களில் சிலர் தம் வலது கையால் அதனை எடுப்பார்கள்; சிலர் தம் இடது கையால் அதனை எடுப்பார்கள். -மனிதனே!- நிராகரிப்பாளர்கள் தங்களைக்குறித்து அஞ்சியவர்களாக இருப்பதைக் காண்பாய். ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தி வைத்த நிராகரிப்பையும் பாவங்களையும் அறிந்துவைத்துள்ளார்கள். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே, சோதனையே! இந்த பதிவேட்டிற்கு என்னவாயிற்று? எங்களின் சிறிய, பெரிய செயல்கள் எதையும் இது பதிவுசெய்யாமல் விட்டுவைக்கவில்லையே!” அவர்கள் உலக வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் எழுதி பதியப்பட்டிருப்பதைக் காண்பார்கள். -தூதரே!- உம் இறைவன் யார்மீதும் அநீதி இழைக்க மாட்டான். பாவம் செய்யாமல் யாரையும் அவன் தண்டிக்க மாட்டான். அவன் தனக்குக் கட்டுப்பட்டவர்களின் கூலியை சிறிதும் குறைத்துவிட மாட்டான்.
अरबी तफ़सीरें:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖ ؕ— اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَهُمْ لَكُمْ عَدُوٌّ ؕ— بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا ۟
18.50. -தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் வானவர்களைச் சாராத ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த இப்லீஸ் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்துவிட்டான். அவன் தன் இறைவனுக்குக் கட்டுப்படாமல் நடந்தான். -மனிதர்களே!- என்னை விட்டுவிட்டு உங்களுக்குப் பகைவர்களாக இருக்கின்ற அவனையும் அவனுடைய சந்ததியையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? எவ்வாறு உங்களின் பகைவர்களை உங்களுக்குப் பாதுகாவர்களாக ஆக்கினீர்கள்? அல்லாஹ்வை பாதுகாவலனாக ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஷைத்தானை பாதுகாவலனாக ஏற்படுத்திக்கொண்ட அநியாயக்காரர்களின் செயல் மிகவும் கெட்டதாகும்.
अरबी तफ़सीरें:
مَاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ ۪— وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّیْنَ عَضُدًا ۟
18.51. என்னை விடுத்து நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொண்ட இவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள்தாம். வானங்களையும் பூமியையும் படைத்தபோது நான் அவர்களை சாட்சியாக வைக்கவில்லை. மாறாக அப்போது அவர்கள் இருக்கவேயில்லை. அவர்களில் சிலரைப் படைத்தபோது சிலரை நான் சாட்சியாக வைக்கவில்லை. படைப்பதிலும் நிர்வகிப்பதிலும் நான் தனித்தவன். நான் வழிகெடுக்கும் மனித, ஜின் இனத்திலுள்ள ஷைத்தான்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொள்பவன் அல்ல. நான் உதவியாளர்களை விட்டும் தேவையற்றவன்.
अरबी तफ़सीरें:
وَیَوْمَ یَقُوْلُ نَادُوْا شُرَكَآءِیَ الَّذِیْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَیْنَهُمْ مَّوْبِقًا ۟
18.52. -தூதரே!- அவர்களிடம் மறுமை நாளை நினைவு கூர்வீராக. அப்போது அல்லாஹ் இவ்வுலகில் தனக்கு இணை கற்பித்தவர்களிடம் கூறுவான்: “உங்களுக்கு உதவிசெய்வதற்காக எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்களை அழையுங்கள் என்று.” அவர்கள் தங்களின் இணைத்தெய்வங்களை அழைப்பார்கள். ஆனால் அவை அவர்களுக்குப் பதிலளிக்க மாட்டா. உதவியும் செய்யமாட்டா. வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே நாம் அவர்கள் ஒன்று சேரும் அழிவிடத்தை ஏற்படுத்திவிடுவோம். அதுதான் நரக நெருப்பாகும்.
अरबी तफ़सीरें:
وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْۤا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ یَجِدُوْا عَنْهَا مَصْرِفًا ۟۠
18.53. இணைவைப்பாளர்கள் நரகத்தைக் காண்பார்கள். எனவே தாங்கள் அதில் விழுபவர்களே என்பது அவர்களுக்கு உறுதியாகிவிடும். அவர்கள் அதனை விட்டும் திரும்பிச் செல்லும் இடத்தை பெற மாட்டார்கள்.
अरबी तफ़सीरें:
इस पृष्ठ की आयतों से प्राप्त कुछ बिंदु:
• على العبد الإكثار من الباقيات الصالحات، وهي كل عمل صالح من قول أو فعل يبقى للآخرة.
1. அடியான் நிலையான நல்லறங்களை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அவைதான் மறுமைக்காக எஞ்சியிருக்கும் நற்செயல்களான ஒவ்வொரு வார்த்தையும் அல்லது செயலுமாகும்.

• على العبد تذكر أهوال القيامة، والعمل لهذا اليوم حتى ينجو من أهواله، وينعم بجنة الله ورضوانه.
2. அடியான் மறுமை நாளின் பயங்கரங்களை நினைவு கூர்ந்து, அந்த நாளின் வேதனையிலிருந்து தப்பித்து அல்லாஹ்வின் சுவனத்தையும் இறைதிருப்தியையும் பெற நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

• كَرَّم الله تعالى أبانا آدم عليه السلام والجنس البشري بأجمعه بأمره الملائكة أن تسجد له في بدء الخليقة سجود تحية وتكريم.
3. அல்லாஹ் நம்முடைய தந்தை ஆதமுக்கு வானவர்கள் அனைவரையும் அவரை படைத்த ஆரம்பத்திலே கண்ணியத்திற்காகவும், முகமன் கூறும் விதமாகவும் சிரம்பணியுமாறு ஏவி, அவரையும் முழு மனித இனத்தையும் சிறப்பித்துள்ளான்.

• في الآيات الحث على اتخاذ الشيطان عدوًّا.
4. ஷைத்தானை பகைவனாக ஆக்கிக்கொள்ளும்படி மேலுள்ள வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
अर्थों का अनुवाद सूरा: अल्-कह्फ़
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल में पवित्र क़ुरआन की संक्षिप्त व्याख्या का अनुवाद - अनुवादों की सूची

कुरआन अध्ययन एवं व्याख्या केंद्र द्वारा निर्गत।

बंद करें