Check out the new design

क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़ * - अनुवादों की सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थों का अनुवाद सूरा: यूनुस   आयत:

யூனுஸ்

الٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟
அலிஃப் லாம் றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்.
अरबी तफ़सीरें:
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَیْنَاۤ اِلٰی رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ؔؕ— قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِیْنٌ ۟
“(நிராகரிக்கின்ற) மனிதர்களை எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் உயர்வான நற்கூலி உண்டு - என நற்செய்தி கூறுவீராக!’’ என்று அவர்களில் உள்ள ஓர் ஆடவருக்கு நாம் வஹ்யி அறிவித்தது இந்த மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்.
अरबी तफ़सीरें:
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ یُدَبِّرُ الْاَمْرَ ؕ— مَا مِنْ شَفِیْعٍ اِلَّا مِنْ بَعْدِ اِذْنِهٖ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன், வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவனாகிய அல்லாஹ்தான். பிறகு, (அவன்) ‘அர்ஷ்’ மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். (உலகத்தில் நடக்கின்ற) காரியங்களை அவன் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். அவனுடைய அனுமதிக்கு பின்னரே தவிர பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. அத்தகைய அல்லாஹ்தான் உங்கள் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். ஆக, நீங்கள் (இந்த வேதத்தின் மூலம்) நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
अरबी तफ़सीरें:
اِلَیْهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا ؕ— وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ— اِنَّهٗ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟
அவனிடமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே! நிச்சயமாக அவன் படைப்பை ஆரம்பிக்கிறான். பிறகு, அதை (அழிக்கிறான். பிறகு அதை) மீண்டும் உருவாக்குகிறான், (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக அவன் (நற்)கூலி கொடுப்பதற்காக. இன்னும், எவர்கள் நிராகரித்தார்களோ, - அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, முற்றிலும் சூடேறி கொதிக்கின்ற (சீழ் சலம் போன்ற) குடிபானமும் மிகத் துன்புறுத்தும் தண்டனையும் அவர்களுக்கு உண்டு.
अरबी तफ़सीरें:
هُوَ الَّذِیْ جَعَلَ الشَّمْسَ ضِیَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ— مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّ ۚ— یُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
அவன்தான் சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். இன்னும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான காரணத்திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. (இவற்றின் மூலம் அல்லாஹ்வின் வல்லமையை) அறி(ய முயற்சிக்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை அவன் (இவ்வாறு) விவரிக்கிறான்.
अरबी तफ़सीरें:
اِنَّ فِی اخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَّقُوْنَ ۟
நிச்சயமாக இரவு பகல் (ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக) மாறி மாறி வருவதிலும், வானங்கள்; இன்னும், பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன.
अरबी तफ़सीरें:
 
अर्थों का अनुवाद सूरा: यूनुस
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़ - अनुवादों की सूची

अनुवाद शैख़ उमर शरीफ़ बिन अब्दुस सलाम ने किया है।

बंद करें