Check out the new design

क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़ * - अनुवादों की सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थों का अनुवाद सूरा: अन्-नूर   आयत:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ— وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ— وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுவாரோ நிச்சயமாக அ(ந்த ஷைத்தானான)வன் அசிங்கமான செயல்களையும் கெட்டதையும் (தன்னை பின்பற்றுவோருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்க மாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
وَلَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰی وَالْمَسٰكِیْنَ وَالْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۪ۖ— وَلْیَعْفُوْا وَلْیَصْفَحُوْا ؕ— اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
உங்களில் செல்வமும் வசதியும் உடையவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் சென்றவர்களுக்கும் தர்மம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம். (செல்வந்தர்களான) அவர்கள் மன்னிக்கட்டும், பெருந்தன்மையுடன் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
अरबी तफ़सीरें:
اِنَّ الَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۪— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
நிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்டவர்களான பத்தினியான பெண்கள் மீது யார் (அவர்கள் செய்யாததை) குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு,
अरबी तफ़सीरें:
یَّوْمَ تَشْهَدُ عَلَیْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்களுக்கு எதிராக அவர்களது நாவுகளும் அவர்களது கரங்களும் அவர்களது கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்த செயலுக்கு சாட்சி பகரும் நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்).
अरबी तफ़सीरें:
یَوْمَىِٕذٍ یُّوَفِّیْهِمُ اللّٰهُ دِیْنَهُمُ الْحَقَّ وَیَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِیْنُ ۟
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களுடைய உண்மையான கூலியை முழுமையாக தருவான். இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், தெளிவானவன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
अरबी तफ़सीरें:
اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ— وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ— اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ— لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠
கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். இன்னும், நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அ(ந்த நல்ல)வர்கள் (பாவிகளாகிய) இவர்கள் சொல்வதிலிருந்து நிரபராதிகள் ஆவார்கள். அவர்களுக்கு மன்னிப்பும் (சொர்க்கம் எனும்) கண்ணியமான அருட்கொடையும் உண்டு.
अरबी तफ़सीरें:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத (பிறருடைய) வீடுகளில் நீங்கள் (அனுமதியின்றி) நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை (உள்ளே செல்லாதீர்கள்). இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும், நீங்கள் நல்லறிவு பெறவேண்டும் என்பதற்காக.
अरबी तफ़सीरें:
 
अर्थों का अनुवाद सूरा: अन्-नूर
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़ - अनुवादों की सूची

अनुवाद शैख़ उमर शरीफ़ बिन अब्दुस सलाम ने किया है।

बंद करें