क़ुरआन के अर्थों का अनुवाद - हिन्दी अनुवाद - उमर शरीफ़ * - अनुवादों की सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थों का अनुवाद सूरा: सूरा अत्-तग़ाबुन   आयत:

ஸூரா அத்தகாபுன்

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ— لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
அவன்தான் உங்களைப் படைத்தான். ஆக, உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கிறார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கிறார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். இன்னும், அவன் உங்களை உருவமைத்தான். ஆக, உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீட்சி இருக்கிறது.
अरबी तफ़सीरें:
یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர்களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؗ— فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? ஆக, அவர்களோ தங்களது (பாவமான) காரியத்தின் தீய முடிவை (இவ்வுலகில்) சுவைத்தனர். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
अरबी तफ़सीरें:
ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ یَّهْدُوْنَنَا ؗ— فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَی اللّٰهُ ؕ— وَاللّٰهُ غَنِیٌّ حَمِیْدٌ ۟
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஆக, “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர். இன்னும் (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டு தேவையற்றவனாக இருக்கிறான். அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன் (படைப்புகளிடம் எவ்வித தேவையும் அற்றவன்), மகா புகழுக்குரியவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ— قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ— وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
“அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!”
अरबी तफ़सीरें:
فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِیْۤ اَنْزَلْنَا ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (குர்ஆன் எனும்) நாம் இறக்கிய ஒளியையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் (சிலைகளை வணங்கிய மக்களும் இஸ்லாமை நிராகரித்த மக்களும்) ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். இன்னும், அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான (பாக்கியமிக்க) வெற்றியாகும்.
अरबी तफ़सीरें:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரக வாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
अरबी तफ़सीरें:
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
अरबी तफ़सीरें:
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ— فَاِنْ تَوَلَّیْتُمْ فَاِنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! ஆக, நீங்கள் புறக்கணித்து விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (உங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை) தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
अरबी तफ़सीरें:
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (ஈமான் கொண்ட) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்.
अरबी तफ़सीरें:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ— وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக (உஷாராக, எச்சரிக்கையாக) இருங்கள். இன்னும், நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
अरबी तफ़सीरें:
اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ— وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ், - அவனிடம்தான் (உங்களுக்கு சொர்க்கம் எனும்) மகத்தான வெகுமதி இருக்கிறது.
अरबी तफ़सीरें:
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِیْعُوْا وَاَنْفِقُوْا خَیْرًا لِّاَنْفُسِكُمْ ؕ— وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் ஆன்மாக்களின் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது ஆன்மாக்களின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.
अरबी तफ़सीरें:
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعِفْهُ لَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ— وَاللّٰهُ شَكُوْرٌ حَلِیْمٌ ۟ۙ
நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றி பாராட்டுபவன், மகா சகிப்பாளன் ஆவான்.
अरबी तफ़सीरें:
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
अरबी तफ़सीरें:
 
अर्थों का अनुवाद सूरा: सूरा अत्-तग़ाबुन
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - हिन्दी अनुवाद - उमर शरीफ़ - अनुवादों की सूची

पवित्र क़ुरआन के अर्थों का तमिल अनुवाद - अनुवाद उमर शरीफ़ बिन अब्दुस सलाम ने किया है।

बंद करें