Check out the new design

क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़ * - अनुवादों की सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थों का अनुवाद सूरा: अल्-आराफ़   आयत:
وَالْبَلَدُ الطَّیِّبُ یَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ— وَالَّذِیْ خَبُثَ لَا یَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ— كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّشْكُرُوْنَ ۟۠
நல்ல பூமி, - அதனுடைய தாவரம் அதன் இறைவனின் அனுமதியினால் (அதிகமாக) உற்பத்தியாகிறது. இன்னும் எது கெட்டுவிட்ட (பூமியாக உள்ள)தோ (அதிலிருந்து) வெகு சொற்பமாகவே தவிர (தாவரங்கள்) உற்பத்தியாகாது. நன்றி செலுத்துகிற மக்களுக்கு இவ்வாறு வசனங்களை நாம் விவரிக்கிறோம்.
अरबी तफ़सीरें:
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு (தூதராக) அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”
अरबी तफ़सीरें:
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
அவருடைய சமுதாயத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “(நூஹே!) உம்மை தெளிவான வழிகேட்டில் நிச்சயமாக நாம் காண்கிறோம்.”
अरबी तफ़सीरें:
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
(நூஹ்) கூறினார்: “என் சமுதாயமே! என்னிடம் எவ்வித வழிகேடு(ம் தவறும்) இல்லை; எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆவேன்.”
अरबी तफ़सीरें:
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنْصَحُ لَكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
“என் இறைவனின் தூது செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். இன்னும், உங்களுக்கு (நன்மையை நாடி) உபதேசிக்கிறேன். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் (வஹ்யின் மூலம்) அறிகிறேன்.”
अरबी तफ़सीरें:
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
“உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து - அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வினால்) கருணை காட்டப்படுவதற்காகவும் - உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா?”
अरबी तफ़सीरें:
فَكَذَّبُوْهُ فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ فِی الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِیْنَ ۟۠
ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும், அவருடன் கப்பலில் இருந்தோரையும் பாதுகாத்தோம். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். நிச்சயமாக அவர்கள் குருடர்களான மக்களாக இருந்தனர்.
अरबी तफ़सीरें:
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اَفَلَا تَتَّقُوْنَ ۟
இன்னும், ‘ஆது’ (சமுதாய மக்களு)க்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. ஆகவே நீங்கள் (அவனை) அஞ்ச வேண்டாமா?”
अरबी तफ़सीरें:
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ سَفَاهَةٍ وَّاِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் காண்கிறோம். இன்னும், நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் (ஒருவராக) எண்ணுகிறோம்.”
अरबी तफ़सीरें:
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ سَفَاهَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
(ஹூது) கூறினார்: “என் சமுதாயமே! மடமை என்னிடம் இல்லை. எனினும், நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆவேன்.”
अरबी तफ़सीरें:
 
अर्थों का अनुवाद सूरा: अल्-आराफ़
सूरों की सूची पृष्ठ संख्या
 
क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़ - अनुवादों की सूची

अनुवाद शैख़ उमर शरीफ़ बिन अब्दुस सलाम ने किया है।

बंद करें