Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Āli 'Imrān   Ayah:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوا الَّذِیْنَ كَفَرُوْا یَرُدُّوْكُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
3.149. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரித்த யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களுக்கு அவர்கள் ஏவும் வழிகேடான விஷயங்களில் நீங்கள் கட்டுப்பட்டால் உங்களின் நம்பிக்கைக்குப் பிறகு உங்களை நிராகரிப்பாளர்களாக்கிவிடுவார்கள். அதனால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள்.
Tafsir berbahasa Arab:
بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ— وَهُوَ خَیْرُ النّٰصِرِیْنَ ۟
3.150. இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் அவர்களால் ஒருபோதும் உங்களுக்கு உதவ முடியாது. மாறாக அல்லாஹ்தான் உங்களின் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவக்கூடியவன். எனவே அவனுக்கே கீழ்ப்படியுங்கள். அவனே மிகச் சிறந்த உதவியாளன். அவனைத்தவிர உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
Tafsir berbahasa Arab:
سَنُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ— وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ— وَبِئْسَ مَثْوَی الظّٰلِمِیْنَ ۟
3.151. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் உங்களுடன் நிலைத்து நின்று போர்புரியாமல் இருக்கும் பொருட்டு அவர்களது உள்ளங்களில் நாம் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவோம். ஏனெனில் அவர்கள் தமது மனோஇச்சையின் படி எவ்வித ஆதாரமும் அற்ற தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். மறுமையில் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடமான நரகம் கெட்ட தங்குமிடமாகும்.
Tafsir berbahasa Arab:
وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ— حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ— مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ— ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ— وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ— وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
3.152. அல்லாஹ் உஹதுப்போரில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவிசெய்து, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினான். அல்லாஹ்வின் அனுமதிகொண்டு அவர்களை நீங்கள் கடுமையாக வெட்டிச்சாய்த்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர் தூதர் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு உறுதியாக நில்லாமல் உங்களது இடங்களில் தொடர்ந்திருப்பதா அல்லது அதனை விட்டுவிட்டு போர்ச்செல்வங்களை திரட்டுவதா என உங்களுக்கு மத்தியில் கருத்துவேறுபட்டு எச்சந்தர்ப்பத்திலும் குறித்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்ற தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் விரும்பும் உதவியை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய பின்னரும் அது நிகழ்ந்தது. உங்களில் இவ்வுலகச் செல்வங்களை விரும்புவர்கள்தாம் தங்களின் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்கள். உங்களில் மறுமையை விரும்புபவர்கள் தூதரின் கட்டளைப்படி தங்களின் இடத்திலேயே உறுதியாக நின்றார்கள். பின்னர் அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு, அவர்களை விட்டும் உங்களைத் திருப்பி அவர்களை உங்கள் மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். உறுதியுடன் பொறுமையாக இருந்து துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாளர்கள் யார், நிலைகுலையும் பலவீனர்கள் யார் என்பது தெரிவதற்காக இவ்வாறு செய்தான். தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் மீது பேரருள் புரியக்கூடியவன். அவர்களுக்கு ஈமானின் பக்கம் வழிகாட்டியுள்ளான். அவர்களின் தவறுகளை மன்னித்தும்விட்டான். அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக அவர்களுக்குக் கூலியும் வழங்கிவிட்டான்.
Tafsir berbahasa Arab:
اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوْلُ یَدْعُوْكُمْ فِیْۤ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَیْلَا تَحْزَنُوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
3.153. நம்பிக்கையாளர்களே! உஹதுப் போரில் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் அடைந்த தோல்வியால் ஒருவரையொருவர் திரும்பிக்கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்குப் பின்னாலிருந்து, இணைவைப்பாளர்களுக்கு முன்னாலிருந்து, “அல்லாஹ்வின் அடியார்களே, என்னிடம் வாருங்கள், அல்லாஹ்வின் அடியார்களே என்னிடம் வாருங்கள்” என்று தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தார். இந்த துன்பத்திற்கும் நெருக்கடிக்கும் மேலும் அல்லாஹ் துன்பத்தையும் நெருக்கடியையும் தொடரச் செய்தான். முதலில் இறைஉதவியையும் போர்ச் செல்வங்களையும் இழந்தீர்கள். பின்னர் நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி உங்களிடையே பரவியது. இந்த துன்பம் ஏனெனில் தூதர் கொல்லப்படவில்லை என்பதை அறிந்தபிறகு இழந்த வெற்றிக்காகவும் போர்ச் செல்வங்களுக்காகவும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காகவும் உயிர்ச் சேதங்களுக்காகவும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான். தூதர் கொல்லப்படவில்லை என்ற செய்தியை அறிந்தபிறகு எல்லா துன்பங்களும் உங்களுக்கு இலகுவாகிவிட்டன. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களோ செய்யும் உறுப்புக்களால் செய்யும் செயல்களோ எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• التحذير من طاعة الكفار والسير في أهوائهم، فعاقبة ذلك الخسران في الدنيا والآخرة.
1. நிராகரிப்பாளர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் மனஇச்சைப்படி நடப்பதை விட்டும் எச்சரிக்கை. ஏனெில் அதன் விளைவு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டம் மாத்திரமே.

• إلقاء الرعب في قلوب أعداء الله صورةٌ من صور نصر الله لأوليائه المؤمنين.
2. எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்துவதும் அல்லாஹ் தன் நேசர்களுக்கு உதவி செய்யும் ஒரு முறையாகும்.

• من أعظم أسباب الهزيمة في المعركة التعلق بالدنيا والطمع في مغانمها، ومخالفة أمر قائد الجيش.
3. உலகத்தின்மீது மோகம்கொண்டு போர்ச் செல்வங்களை விரும்பி படைத்தளபதியின் கட்டளைக்கு மாற்றம் செய்வது போரில் தோல்விக்கான காரணிகளில் ஒன்றாகும்.

• من دلائل فضل الصحابة أن الله يعقب بالمغفرة بعد ذكر خطئهم.
4.நபித்தோழர்களின் தவறைக் குறிப்பிடும் போது அதனைத் தொடர்ந்து அவர்களை மன்னித்துவிட்டதையும் அல்லாஹ் குறிப்பிடுவது அவர்களது சிறப்பை எடுத்துக்காட்டும் சான்றாகும்.

 
Terjemahan makna Surah: Āli 'Imrān
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup