Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: At-Taubah   Ayah:
یَعْتَذِرُوْنَ اِلَیْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَیْهِمْ ؕ— قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ ؕ— وَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
9.94. முஸ்லிம்கள் போர் முடிந்து திரும்பிய பிறகு பின்தங்கிய நயவஞ்சகர்கள் நொண்டிச் சாக்குப்போக்குகளை முன்வைக்கின்றனர். அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் பின்வருமாறு மறுப்புக் கூறுமாறு வழிகாட்டுகிறான்: “பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் கூறும் காரணங்களில் உங்களை நாங்கள் ஒரு போதும் நம்பமாட்டோம். உங்களின் உள்ளங்களில் உள்ள சிலதை அல்லாஹ் நமக்கு அறிவித்துவிட்டான். உங்களை மன்னிப்பதற்கு நீங்கள் பாவமன்னிப்புக் கோருகிறீர்களா அல்லது உங்களின் நயவஞ்சகத்தனத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கவனிப்பார்கள். பின்னர் எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். எனவே பாவமன்னிப்புக் கோருவதன் பக்கம், நற்செயல்களின் பக்கம் விரையுங்கள்.
Tafsir berbahasa Arab:
سَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَیْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ ؕ— فَاَعْرِضُوْا عَنْهُمْ ؕ— اِنَّهُمْ رِجْسٌ ؗ— وَّمَاْوٰىهُمْ جَهَنَّمُ ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
9.95. நம்பிக்கையாளர்களே! நீங்கள் போர் முடிந்து திரும்பி வந்தால் பின்தங்கிய இவர்கள் நீங்கள் அவர்களை பழிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்காக தமது பொய்யான சாக்குப்போக்குகளை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். வெறுத்தவர்களாக அவர்களை விட்டு விடுங்கள். அவர்களைப் புறக்கணியுங்கள். அவர்கள் அசுத்தமானவர்கள் அந்தரங்கம் கெட்டவர்கள். அவர்களின் நயவஞ்சகம் மற்றும் பாவங்களுக்குத் தண்டனையாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.
Tafsir berbahasa Arab:
یَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ ۚ— فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَرْضٰی عَنِ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
9.96. -நம்பிக்கையாளர்களே!- பின்தங்கிய இவர்களை நீங்கள் பொருந்திக் கொண்டு அவர்களது சாக்குப் போக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சத்தியம் செய்கின்றனர். அவர்களை நீங்கள் பொருந்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களைப் பொருந்திக் கொண்டால் உங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்து விடுவீர்கள். நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தனத்தாலும் தனக்கு அடிபணியாத சமூகத்தைக் கொண்டு அல்லாஹ் திருப்தியடைய மாட்டான். -முஸ்லிம்களே!- அல்லாஹ் யாரைக் குறித்து திருப்தியடையவில்லையோ அவர்களின் விஷயத்தில் நீங்களும் திருப்தியடைவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
Tafsir berbahasa Arab:
اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا یَعْلَمُوْا حُدُوْدَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
9.97. நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் அவர்களது நிராகரிப்பும் நயவஞ்சகமும் நகரவாசிகளை விட கடுமையாக இருக்கும். வெறுப்பு, கடின மனம் மற்றும் குறைவான தொடர்பு, ஆகிய பண்புகள் அவர்களிடம் உள்ளதால் மார்க்கத்தையும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய சட்டங்களையும் கடமைகளையும் உபரியானவற்றையும் அவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
Tafsir berbahasa Arab:
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یَّتَّخِذُ مَا یُنْفِقُ مَغْرَمًا وَّیَتَرَبَّصُ بِكُمُ الدَّوَآىِٕرَ ؕ— عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
9.98. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்த செல்வம் நஷ்டமும் அபராதமுமாகும் எனக் கருதுவோரும் நாட்டுப் புறத்தைச் சேர்ந்த நயவஞ்சகர்களில் உள்ளனர். ஏனெனில் செலவளித்தால் கூலி வழங்கப்படாது தடுத்துக் கொண்டால் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் முகஸ்துதிக்காகவும் தப்பிப்பதற்காகவும் செலவு செய்கிறார்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அதன் மூலம் உங்களிடமிருந்து விடுபட்டு விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு நிகழ வேண்டும் என விரும்பும் தீங்கு, மோசமான விளைவுகள் ஆகியவற்றை நம்பிக்கையாளர்களுக்கு நிகழாமல் அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான். அவர்கள் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக் கூடியவன்; மறைத்து வைத்திருப்பதை அவன் நன்கறிந்தவன்.
Tafsir berbahasa Arab:
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَتَّخِذُ مَا یُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ ؕ— اَلَاۤ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ ؕ— سَیُدْخِلُهُمُ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
9.99. நாட்டுப்புற வாசிகளில் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதை அவன் நெருக்கத்தைப் பெறும் வழியாகவும் தூதரின் பிரார்த்தனையையும் பாவமன்னிப்பையும் பெறுவதற்கான சாதனமாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் செலவு செய்வதும் தூதரின் பிரார்த்தனையும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தருவதாகும். இதற்கான கூலியை அவர்கள் அல்லாஹ்விடம் பெறுவார்கள். அவன் மன்னிப்பையும் சுவனத்தையும் உள்ளடக்கிய தன் விசாலமான அருளில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• ميدان العمل والتكاليف خير شاهد على إظهار كذب المنافقين من صدقهم.
1. நயவஞ்சகர்களின் பொய்யை வெளிப்படுத்துவதற்கு சிறந்த சான்று செயல் மற்றும் கடமைகளின் களமேயாகும்.

• أهل البادية إن كفروا فهم أشد كفرًا ونفاقًا من أهل الحضر؛ لتأثير البيئة.
2. நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் சூழ்நிலையின் தாக்கத்தால் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் நகரவாசிகளைவிட கடுமையானவர்களாக இருப்பார்கள்.

• الحض على النفقة في سبيل الله مع إخلاص النية، وعظم أجر من فعل ذلك.
3. உளத் தூய்மையுடன் அல்லாஹ்வின் பாதையில் செலவளிக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது மகத்தான கூலியைத் பெற்றுத்தரக்கூடியதாகும்.

• فضيلة العلم، وأن فاقده أقرب إلى الخطأ.
4. அறிவின் முக்கியத்துவமும் அதனை இழந்தவன் தவறுவிடுவதற்கு மிகவும் அருகதையுடையவன் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Terjemahan makna Surah: At-Taubah
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup