Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: At-Taubah   Ayah:
لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰی جَآءَ الْحَقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ ۟
9.48. தபூக் போருக்கு முன்னாலிருந்தே இந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குழைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். -தூதரே!- பலவகையான சூழ்ச்சிகளால் போர் செய்யும் உமது எண்ணத்தை மாற்ற நினைத்தனர். ஆனால் அல்லாஹ்வின் உதவியும் பலப்படுத்தலும் உமக்குக் கிடைத்தன. தன் மார்க்கத்தைக் கண்ணியப்படுத்தி, தன் எதிரிகளை அடக்கினான். அசத்தியம் சத்தியத்தை மிகைக்க வேண்டும் என அவர்கள் விரும்புபவர்களாக இருந்ததால் சத்தியம் வெற்றி பெறுவதை அவர்கள் வெறுப்பவர்களாக உள்ளனர்.
Tafsir berbahasa Arab:
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ ائْذَنْ لِّیْ وَلَا تَفْتِنِّیْ ؕ— اَلَا فِی الْفِتْنَةِ سَقَطُوْا ؕ— وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟
9.49. “அல்லாஹ்வின் தூதரே! போரை விட்டு பின்தங்குவதற்கு எனக்கு அனுமதியளியுங்கள். என்னை உங்களுடன் புறப்படுமாறு கட்டாயப்படுத்தி எதிரிகளின் - ரோமானியரின் - பெண்களால் நான் பாதிக்கப்பட்டு பாவத்தில் விழுந்துவிட காரணமாகிவிடாதீர்கள்” என்று நயவஞ்சகர்களில் சிலர் உம்மிடம் போலியான சாக்குப்போக்குகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதைவிட பெரும் சோதனைகளான நயவஞ்சகம், போருக்குப் புறப்படாமல் பின்தங்குதல் ஆகியவற்றில் அவர்கள் விழுந்துவிட்டார்கள். மறுமை நாளில் நரகம் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கும். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது. தப்புவதற்கான எந்த வழியையும் அவர்கள் பெறமாட்டார்கள்.
Tafsir berbahasa Arab:
اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ ۚ— وَاِنْ تُصِبْكَ مُصِیْبَةٌ یَّقُوْلُوْا قَدْ اَخَذْنَاۤ اَمْرَنَا مِنْ قَبْلُ وَیَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ ۟
9.50. -அல்லாஹ்வின் தூதரே!- அல்லாஹ்வின் அருளான உமக்கு மகிழ்ச்சியளிக்கும் வெற்றியோ போர்ச் செல்வங்களோ கிடைத்தால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள். அதற்காக கவலைப்படுகிறார்கள். உமக்கு துன்பமோ தோல்வியோ கிடைத்து விட்டால் இந்த நயவஞ்சகர்கள் கூறுகிறார்கள்: “நம்மை நாம் காத்துக் கொண்டோம் உறுதியான முடிவெடுத்து நம்பிக்கையாளர்கள் போருக்குச் சென்றது போல் நாம் போருக்குச் செல்லவில்லை. அவர்கள் சென்றதனால் கொலையுண்டு கைதுக்கும் ஆளானார்கள். ”பின்னர் இந்த நயவஞ்சகர்கள் தப்பிய மகிழ்ச்சியுடன் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்கிறார்கள்.
Tafsir berbahasa Arab:
قُلْ لَّنْ یُّصِیْبَنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا ۚ— هُوَ مَوْلٰىنَا ۚ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
9.51. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் தலைவனாகவும் நாங்கள் அடைக்கலம் தேடும் பாதுகாவலனாகவும் இருக்கின்றான். நாங்கள் எங்கள் விவகாரங்களில் அவனையே சார்ந்துள்ளோம். அவன் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே அவர்களுக்குப் போதுமானவன்; மிகச் சிறந்த பொறுப்பாளன்.
Tafsir berbahasa Arab:
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَاۤ اِلَّاۤ اِحْدَی الْحُسْنَیَیْنِ ؕ— وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ یُّصِیْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤ اَوْ بِاَیْدِیْنَا ۖؗۗ— فَتَرَبَّصُوْۤا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ ۟
9.52. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “வெற்றி அல்லது வீரமரணம் நிகழுவதைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? ஆனால் நாமோ உங்களை அழித்து விடும் ஒரு வேதனையை அல்லாஹ் உங்கள் மீது இறக்குவதை அல்லது உங்களுடன் போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் போது எங்களின் கைகளால் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் உங்களை அவன் தண்டிப்பதையுமே எதிரப்பார்க்கிறோம். எனவே எங்களுக்கு நேர்வதை நீங்கள் எதிர்பாருங்கள். உங்களுக்கு நேர்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
Tafsir berbahasa Arab:
قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ یُّتَقَبَّلَ مِنْكُمْ ؕ— اِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِیْنَ ۟
9.53. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களின் செல்வங்களை விரும்பியோ விரும்பாமலோ செலவு செய்யுங்கள். அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் அவனுக்கு அடிபணியாததனாலும் நீங்கள் செலவு செய்யும் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது.
Tafsir berbahasa Arab:
وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّاۤ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا یَاْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰی وَلَا یُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ ۟
9.54. அவர்கள் செய்யும் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படாததற்கான மூன்று காரணங்கள்: (ஒன்று) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். (இரண்டு) அவர்கள் தொழுதாலும் சோம்பேறிகளாகவே தொழுகிறார்கள். (மூன்று) அவர்கள் தங்களின் செல்வங்களை விரும்பி செலவு செய்வதில்லை. வெறுத்தவாறே செலவு செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் தொழுகைகள் மற்றும் தர்மங்களின் மூலம் நற்கூலியை விரும்புவதில்லை.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• دأب المنافقين السعي إلى إلحاق الأذى بالمسلمين عن طريق الدسائس والتجسس.
1. சூழ்ச்சிகள் மற்றும் வேவு பார்ப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவைக்க முயற்சி செய்வது நயவஞ்சகர்களின் வழக்கமாகும்.

• التخلف عن الجهاد مفسدة كبرى وفتنة عظمى محققة، وهي معصية لله ومعصية لرسوله.
2. போருக்குச் செல்லாது பின்தங்குவது பெரும் சீர்கேடும் குழப்பமுமாகும். மேலும் அது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்வதுமாகும்.

• في الآيات تعليم للمسلمين ألا يحزنوا لما يصيبهم؛ لئلا يَهِنوا وتذهب قوتهم، وأن يرضوا بما قدَّر الله لهم، ويرجوا رضا ربهم؛ لأنهم واثقون بأن الله يريد نصر دينه.
3. மேற்கூறப்பட்ட வசனங்களிலில் முஸ்லிம்களுக்கு பின்வரும் போதனைகள் உள்ளன: முஸ்லிம்கள் பலமிழந்து அவர்களது பலம் குன்றிவிடாமலிருக்கும் பொருட்டு தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கண்டு கவலையடையக்கூடாது; அவர்களுக்கு அல்லாஹ் விதித்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவனுடைய திருப்தியையே ஆதரவு வைக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தன் மார்க்கத்திற்கு உதவி செய்தே தீருவான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பக்கூடியவர்களாவர்.

• من علامات ضعف الإيمان وقلة التقوى التكاسل في أداء الصلاة والإنفاق عن غير رضا ورجاء للثواب.
4. தொழுகையை நிறைவேற்றுவதில் சோம்பலும் மனவிருப்பமின்றி, நன்மையை எதிர்பார்க்காமல் செலவளிப்பதும் பலவீனமான நம்பிக்கை மற்றும் இறையச்சம் மற்றும் நம்பிக்கைக் குறைபாட்டின் அடையாளமாகும்.

 
Terjemahan makna Surah: At-Taubah
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup