Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Ar-Rûm   Versetto:
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ تَقُوْمَ السَّمَآءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖ ؕ— ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً ۖۗ— مِّنَ الْاَرْضِ اِذَاۤ اَنْتُمْ تَخْرُجُوْنَ ۟
30.25. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய சான்றுகளில் சில: வானம் விழுந்து விடாமல் பூமி தகர்ந்து விடாமல் அவனுடைய கட்டளையால் நிலைத்து நிற்பது. பின்னர் வானவரை சூர் ஊதச் சொல்லி ஓர் அழைப்பைக்கொண்டு அவன் பூமியிலிருந்து உங்களை அழைத்தால் நீங்கள் விசாரணைக்கும் கூலி கொடுக்கப்படுவதற்கும் உங்கள் அடக்கஸ்த்தலங்களிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்.
Esegesi in lingua araba:
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
30.26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் படைத்தல், நிர்ணயித்தல், ஆட்சி அதிகாரத்தால் அவனுக்கு மட்டுமே உரியவை. அவை இரண்டிலும் உள்ள அவனுடைய படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கே அடிபணிகின்றன.
Esegesi in lingua araba:
وَهُوَ الَّذِیْ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَیْهِ ؕ— وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
30.27. அவனே முன்மாதிரியின்றி படைப்பைத் தொடங்கினான். பின்னர் அது அழிந்த பிறகு அதனை மீண்டும் உருவாக்குவான். ஆரம்பமாகப் படைப்பதைவிட மீண்டும் படைப்பது இலகுவானது. இரண்டும் அவனுக்கு இலகுவானதுதான். ஏனெனில் அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும். கண்ணியமான, பூரணத்துவமான பண்புகள் அனைத்திலும் மிக உயர்ந்த வர்ணணை அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; அவனை யாரும் மிகைக்க முடியாது. படைப்பிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.
Esegesi in lingua araba:
ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ ؕ— هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِیْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِیْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِیْفَتِكُمْ اَنْفُسَكُمْ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
30.28. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறான், “சுதந்திரமான உங்கள் வியாபாரப் பங்காளி, சொத்தில் தனது பங்கைப் பிரித்தெடுப்பதை நீங்கள் அஞ்சுவது போன்று உங்கள் அடிமைகளில் யாராவது உங்களின் செல்வங்களில் உங்களுக்கு சம பங்காளிகளாக இருப்பார்களா? உங்கள் அடிமைகள் இவ்வாறு இருப்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? நிச்சயமாக நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். தன் படைப்புகளிலும் அடிமைகளிலும் யாரும் பங்காளியாகாமல் இருப்பதற்கு மிகத் தகுதியானவன் அல்லாஹ்வே. இவ்வாறு உதாரணங்கள் மூலமாகவும் இன்னபிற விஷயங்களின் மூலமாகவும் நாம் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்துகின்றோம். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அவற்றைக்கொண்டு பயனடைவார்கள்.
Esegesi in lingua araba:
بَلِ اتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَهْوَآءَهُمْ بِغَیْرِ عِلْمٍ ۚ— فَمَنْ یَّهْدِیْ مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ— وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
30.29. அவர்களின் வழிகேட்டிற்கான காரணம், ஆதாரங்களின் குறையோ, அதன் தெளிவற்ற தன்மையோ அல்ல. மாறாக தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதும் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுமே நிச்சயமாக அவர்களின் வழிகேட்டிற்கான மூல காரணமாகும். அல்லாஹ்வுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் அறியாமையினால் இவ்வாறு செய்கின்றனர். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிடுவானோ அவருக்கு யார்தான் நேர்வழி காட்டுவார்? ஒருவராலும் நேர்வழிகாட்ட முடியாது. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காக்கும் உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ؕ— فِطْرَتَ اللّٰهِ الَّتِیْ فَطَرَ النَّاسَ عَلَیْهَا ؕ— لَا تَبْدِیْلَ لِخَلْقِ اللّٰهِ ؕ— ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙۗ— وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۗۙ
30.30. -தூதரே!- நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிட்டு அல்லாஹ் உமக்கு வழிகாட்டிய மக்களின் இயல்பிலுள்ள மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் திரும்பிவிடுங்கள். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமுமில்லை. இதுதான் கோணலற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் நிச்சயமாக இதுதான் சத்திய மார்க்கம் என்பதை அறிய மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
مُنِیْبِیْنَ اِلَیْهِ وَاتَّقُوْهُ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
30.31. உங்கள் பாவங்களிலிருந்து மீண்டு அல்லாஹ்விடம் திரும்பிவிடுங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். இயல்புக்கு முரண்படும் இணைவைப்பாளர்களாக மாறி தமது வணக்கத்தில் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிவிடாதீர்கள்.
Esegesi in lingua araba:
مِنَ الَّذِیْنَ فَرَّقُوْا دِیْنَهُمْ وَكَانُوْا شِیَعًا ؕ— كُلُّ حِزْبٍ بِمَا لَدَیْهِمْ فَرِحُوْنَ ۟
30.32. தங்களின் மார்க்கத்தை மாற்றி, அவற்றின் சிலவற்றின் மீது நம்பிக்கைகொண்டு சிலவற்றை நிராகரித்த இணைவைப்பாளர்களில் ஆகிவிடாதீர்கள். அவர்கள் பல பிரிவுகளாகி விட்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் உள்ள அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். நிச்சயமாக அவர்கள் மாத்திரம்தான் சத்தியத்தில் இருக்கிறார்கள் மற்றவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• خضوع جميع الخلق لله سبحانه قهرًا واختيارًا.
1. படைப்புகள் அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வுக்கு அடிபணியத்தான் செய்கின்றன.

• دلالة النشأة الأولى على البعث واضحة المعالم.
2. ஆரம்ப உருவாக்கம் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான தெளிவான அடையாளமாகும்.

• اتباع الهوى يضل ويطغي.
3. மன இச்சையைப் பின்பற்றுபவது வழிகெடுத்துவிடும்; வரம்பு மீறவைக்கும்.

• دين الإسلام دين الفطرة السليمة.
4. இஸ்லாம் மார்க்கமே நேரான இயல்பு ஏற்றுக்கொள்ளும் மார்க்கமாகும்.

 
Traduzione dei significati Sura: Ar-Rûm
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi