Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Ar-Rûm   Versetto:
وَلَىِٕنْ اَرْسَلْنَا رِیْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْ بَعْدِهٖ یَكْفُرُوْنَ ۟
30.51. அவர்களுடைய பயிர்களின் மீது நாம் நாசப்படுத்தக்கூடிய காற்றை அனுப்பி அதனால் பச்சைப் பசேலென இருந்த பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் கண்டால் அதன் பிறகு அல்லாஹ்வின் முந்தைய பல அருட்கொடைகளையும் நிராகரித்துவிடுவார்கள்.
Esegesi in lingua araba:
فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
30.52. நிச்சயமாக உம்மால் இறந்தவர்களுக்கு உங்களால் செவியேற்கச் செய்ய முடியாதது போன்று செவிடர்களையும் செவியேற்கச் செய்ய முடியாது. செவிமடுக்காததை உறுதி செய்வதற்காக அவர்கள் உம்மைவிட்டும் தூரமாகிவிட்டார்கள். அதே போன்று புறக்கணிப்பிலும் பயனடையாமையிலும் இவர்களை ஒத்தவர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது.
Esegesi in lingua araba:
وَمَاۤ اَنْتَ بِهٰدِ الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ— اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟۠
30.53. நேரான வழியை விட்டும் நெறிபிறழ்ந்துவிட்டவர்களுக்கு உம்மால் நேர்வழியில் செல்ல பாக்கியம் அளிக்க முடியாது. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே உம்மால் பயனுள்ள வகையில் செவியேற்கச் செய்ய முடியும். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் நீர் கூறுவதைக்கொண்டு பயனடைவார்கள். அவர்கள் நம்முடைய கட்டளைக்கு அடிபணிந்து அதற்குக் கட்டுப்பட்டவர்கள்.
Esegesi in lingua araba:
اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَیْبَةً ؕ— یَخْلُقُ مَا یَشَآءُ ۚ— وَهُوَ الْعَلِیْمُ الْقَدِیْرُ ۟
30.54. -மனிதர்களே!- அல்லாஹ்வே உங்களை அற்ப நீரிலிருந்து படைத்தான். பின்னர் பலவீனமான உங்களின் சிறுபராயத்தின் பின் ஆண்மைப் பலத்தை அளித்தான். ஆண்மைப் பலத்திற்குப் பிறகு முதுமையின் பலவீனத்தை ஏற்படுத்தினான். அல்லாஹ் தான் நாடிய பலத்தையும் பலவீனத்தையும் படைக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் பேராற்றல் உடையவன். எதுவும் அவனுக்கு இயலாததல்ல.
Esegesi in lingua araba:
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یُقْسِمُ الْمُجْرِمُوْنَ ۙ۬— مَا لَبِثُوْا غَیْرَ سَاعَةٍ ؕ— كَذٰلِكَ كَانُوْا یُؤْفَكُوْنَ ۟
30.55. மறுமை நாள் நிகழும்போது குற்றவாளிகள் சத்தியமிட்டுக் கூறுவார்கள், “நாங்கள் அடக்கஸ்த்தலங்களில் ஒரு மணிநேரம்தான் தங்கியிருந்தோம், என்று.” அவர்கள் அடக்கஸ்த்தலங்களில் தங்கியிருந்த காலத்தை அறிவதிலிருந்து திருப்பப்பட்டதைப்போன்றே உலகில் சத்தியத்தைவிட்டும் அவர்கள் திருப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
Esegesi in lingua araba:
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِیْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِیْ كِتٰبِ اللّٰهِ اِلٰى یَوْمِ الْبَعْثِ ؗ— فَهٰذَا یَوْمُ الْبَعْثِ وَلٰكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
30.56. ஞானம் வழங்கப்பட்ட தூதர்களும் வானவர்களும் கூறுவார்கள்: “அல்லாஹ் எழுதி வைத்த அவனுடைய முன்னைய அறிவின்படி அவன் உங்களைப் படைத்த நாளிலிருந்து நீங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாள்வரை தங்கியிருந்தீர்கள். இதுதான் மக்கள் தம் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்துவரும் நாளாகும். ஆயினும் நீங்கள் மறுமை நாள் நிகழப் போகிறது என்பதை அறியாமல் இருந்தீர்கள். எனவேதான் அதனை நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள்.
Esegesi in lingua araba:
فَیَوْمَىِٕذٍ لَّا یَنْفَعُ الَّذِیْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
30.57. விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் அவர்களை அல்லாஹ் எழுப்பும் நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் இட்டுக்கட்டி வைத்திருக்கும் சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளிக்காது. பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ் விரும்பியபடி மீளுமாறு அவர்கள் கோரப்படவும் மாட்டார்கள். ஏனெனில் அதற்குரிய நேரம் தவறிவிட்டது.
Esegesi in lingua araba:
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ— وَلَىِٕنْ جِئْتَهُمْ بِاٰیَةٍ لَّیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُوْنَ ۟
30.58. நாம் இந்த குர்ஆனில் மனிதர்களின் மீது -அக்கறை கொண்டு- அவர்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாவதற்காக எல்லா உதாரணங்களையும் கூறியுள்ளோம். -தூதரே!- நீர் உண்மையாளர் என்பதற்கு ஏதேனும் ஆதாரத்தை அவர்களிடம் கொண்டுவந்தால், “நீர் கொண்டு வந்ததில் நீங்கள் அசத்தியவாதிகளே” என்று அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்.
Esegesi in lingua araba:
كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
30.59. நீர் கொண்டுவந்த ஆதாரத்தை நம்பாத இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டது போன்றே நிச்சயமாக நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்று அறியாதவர்களின் உள்ளங்களிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
Esegesi in lingua araba:
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا یَسْتَخِفَّنَّكَ الَّذِیْنَ لَا یُوْقِنُوْنَ ۟۠
30.60. -தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பிப்பதை பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. உதவி செய்வதாகவும் அதிகாரத்தை வழங்குவதாகவும் அல்லாஹ் உமக்கு அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். திட்டமாக தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை உறுதியாக நம்பாதவர்கள் உம்மை அவசரப்பட்டு, பொறுமையைக் கைவிடுவதன்பால் தள்ளிவிட வேண்டாம்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• يأس الكافرين من رحمة الله عند نزول البلاء.
1. சோதனை இறங்கும் போது அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராகரிப்பாளர்கள் நிராசையடைதல்.

• هداية التوفيق بيد الله، وليست بيد الرسول صلى الله عليه وسلم.
2. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அது தூதரின் கைவசம் இல்லை.

• مراحل العمر عبرة لمن يعتبر.
3. வாழ்நாளின் கட்டங்கள் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினையாகும்.

• الختم على القلوب سببه الذنوب.
4. பாவங்கள் உள்ளங்களில் முத்திரையிடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.

 
Traduzione dei significati Sura: Ar-Rûm
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi