Check out the new design

クルアーンの対訳 - タミル語対訳 - Abdul-Hamid Bakavij * - 対訳の目次

XML CSV Excel API
Please review the Terms and Policies

対訳 章: 雌牛章   節:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
6. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ— وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ— وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
7. (அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டு விட்டது. தவிர, அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு.
アラビア語 クルアーン注釈:
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
8. (நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதர்களில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.
アラビア語 クルアーン注釈:
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ— وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
9. அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
10. (ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு (அந்)நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
アラビア語 クルアーン注釈:
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ— قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
11. அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(துகொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் “நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)'' எனக் கூறுகிறார்கள்.
アラビア語 クルアーン注釈:
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
12. நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
13. மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினால், (அதற்கு) “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் அறிவீனர்கள். ஆனால், (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ— قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ— اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
14. தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் “நாங்களும் (உங்களைப்போல்) நம்பிக்கை கொண்டு விட்டோம்'' எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்'' எனக் கூறுகின்றனர்.
アラビア語 クルアーン注釈:
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
15. (அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்.
アラビア語 クルアーン注釈:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪— فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
16. இவர்கள்தான் நேரானவழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
アラビア語 クルアーン注釈:
 
対訳 章: 雌牛章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - タミル語対訳 - Abdul-Hamid Bakavij - 対訳の目次

Sh. Abdulhamid Albaqoiによる翻訳

閉じる