クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (24) 章: 東ローマ人章
وَمِنْ اٰیٰتِهٖ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَیُحْیٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
30.24. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: அவன் உங்களுக்கு வானத்தில் மின்னலை காண்பிக்கிறான், அதில் இடியின் அச்சத்தையும் மழையின் எதிர்பார்ப்பையும் இணைத்துவைத்துள்ளான். வானத்திலிருந்து மழையை இறக்கி வறண்ட பூமியை அதில் தாவரங்களை முளைக்கச் செய்து உயிர்ப்பிக்கிறான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் விளங்கிக் கொள்ளும் மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் மரணித்ததன் பின் எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகக்கொள்வார்கள்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• إعمار العبد أوقاته بالصلاة والتسبيح علامة على حسن العاقبة.
1. அடியான் தன் நேரங்களை அல்லாஹ்வைத் தொழுவதற்கும் அவனைப் புகழ்வதற்கும் செலவிடுவது அவனுடைய நல்ல முடிவிற்கான அடையாளமாகும்.

• الاستدلال على البعث بتجدد الحياة، حيث يخلق الله الحي من الميت والميت من الحي.
2. அல்லாஹ் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் இவைகள் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும்.

• آيات الله في الأنفس والآفاق لا يستفيد منها إلا من يُعمِل وسائل إدراكه الحسية والمعنوية التي أنعم الله بها عليه.
3. உயிர்களிலும் பிரபஞ்சத்திலும் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை தங்களுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட புலனுணர்வுகளையும் உள்ரங்கமான சாதனங்களையும் செயற்படுத்துபவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

 
対訳 節: (24) 章: 東ローマ人章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる